×

சீதப்பால் தாடகை மலையில் தீயை அணைக்க சென்றவர்களுக்கு கிடைத்த கறி விருந்து-சிறுவர்கள் தப்பி ஓட்டம்

நாகர்கோவில் : சீதப்பால் தாடகை மலையில் தீயை அணைக்க சென்றவர்களுக்கு கறி விருந்து கிடைத்தது. குமரியில் முன்பு கோடையில், வருவாய் மற்றும் காப்பு காடுகளில் மரக்கடத்தல் மற்றும் ஆடுகள் மேய்ச்சலுக்கு விடுபவர்களால் தீ விபத்து ஏற்படுத்தப்பட்டு வந்தது. தற்போது, கோடை காலத்தில் பெரும் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க, வனத்துறை சார்பில் பயர் லைன் எனப்படும் தீ தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்காக மலையில் உள்ள கோரைப் புற்கள் மற்றும் புதர்கள் பாதுகாப்பான முறையில் தீ வைத்து அழிக்கப்படுகின்றன. சில பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டால், வனத்துறை மற்றும் தீ அணைப்பு துறை இணைந்து தீயை அணைத்தும் வருகின்றனர். கடந்த 5 நாட்களாக சீதப்பாலில் தாடகை மலையில், காலை முதல் மாலை வரை தொடர்ச்சியாக தீ பிடித்து எரிந்த வண்ணம் உள்ளது. நேற்று அதிகாலை 4 மணி முதல் மலையின் இருபுறமும் தீ பிடித்து எரிந்தது. இதனை வனத்துறையை சேர்ந்த சுமார் 8க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கிடையே தெள்ளாந்தி, சீதப்பால், அவ்வையார் அம்மன்கோயில், செண்பகராமன்புதூர் பகுதிகளில் கால்வாய் கரைகளில், விடுமுறை நாட்களில் வெளியூர்களை சேர்ந்த இளைஞர்கள் சமைத்து சாப்பிடுவது மற்றும் மது அருந்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நேற்றும் மதியம் சுமார் 14 முதல் 15 வயது மதிக்கதக்க 20க்கும் மேற்பட்ட சிறுவர்கள், சாதம் சமைத்து, ஆட்டுக்கறி குழம்பும் வைத்தனர். அவர்கள் குளித்து விட்டு சாப்பிட வரும் போது தீயை அணைக்க வந்த ஊழியர்கள் இருவர், சாப்பாடு வாங்குவதற்காக மலையில் தீ எரிந்த பகுதியில் இருந்து கீழே வந்தனர். அவர்களை கண்டதும் சிறுவர்கள் சமையல் பொருட்கள், பாத்திரங்களை போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து, வனக்காவலர்களுக்கு அந்த ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்தது அங்கு வந்த வனத்துறை ஊழியர்கள் தங்கள் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தனர்.பின்னர் சிறுவர்கள் யாரென  தெரியாததால், சரி, நாம் தீயை அணைக்க வருவது தெரிந்து கறி விருந்து வைத்துள்ளனர் எனக்கூறியபடி, சிறுவர்கள் சமையல் செய்து விட்டு மீதம் இருந்த தேங்காய் எண்ணெயையை தலையில் தேய்த்து விட்டு, சிறுவர்கள் வைத்திருந்த இலைகள், பாத்திரங்களில் இருந்த ஆட்டுக்கறி குழம்பு மற்றும் சாதம் இருந்த ஆகியவற்றை  தீ எரிந்த பகுதிக்கு கொண்டு சென்றனர்….

The post சீதப்பால் தாடகை மலையில் தீயை அணைக்க சென்றவர்களுக்கு கிடைத்த கறி விருந்து-சிறுவர்கள் தப்பி ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Thadagai hill ,Sitapa ,Nagercoil ,Sitapal ,Kumari ,Dinakaran ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...