×

ரஷ்யாவுடன் ‘பிஸ்னஸ்’ கிடையாது : பெப்சி, கோகோ – கோலா அறிவிப்பு

வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க நிறுவனங்களான பெப்சி, கோகோ கோலா, மெக்டொனால்டு மற்றும் ஸ்டார்பக்ஸ் ஆகியவை ரஷ்யாவில் தங்களது சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளன. இதுதொடர்பாக அமெரிக்க பன்னாட்டு துரித உணவு நிறுவனமான மெக்டொனால்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரஷ்யாவில் உள்ள தனது 850 விற்பனை நிலையங்களின் அனைத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம். இதனால் பாதிக்கப்படும் 62,000 ரஷ்ய தொழிலாளர்களின் சம்பளத்தை தொடர்ந்து அளிப்போம்’ என்று தெரிவித்துள்ளது. கோகோ – கோலா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் நடத்தி வரும் தாக்குதலால் நடந்து வரும் சோகமான நிகழ்வுகளால் மக்களுடன் எங்களது இதயமும் இணைந்திருக்கிறது’ என்றும், பெப்சி நிறுவனம் வௌியிட்ட அறிவிப்பில், ‘ரஷ்யாவில் 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் எங்களது நிறுவனம், எங்களின் வணிகத்திற்கு மனிதாபிமானம் முக்கியமாக இருக்க வேண்டும்; உக்ரைன் அகதிகளுக்கு தேவையான பொருள்களை வழங்குவோம்’ என்று தெரிவித்துள்ளது. இதனிடையே, ரஷ்யாவிற்கான ஏற்றுமதியை நிறுத்துவதாக ரோலக்ஸ் வாட்ச் நிறுவனமும் அறிவித்துள்ளது….

The post ரஷ்யாவுடன் ‘பிஸ்னஸ்’ கிடையாது : பெப்சி, கோகோ – கோலா அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Russia ,Pepsi ,Coca-Cola ,Washington ,Ukraine ,Dinakaran ,
× RELATED உக்ரைன் நகரத்தை நோக்கி முன்னேறும்...