×

புதுச்சேரியில் பைக் திருடிய சிதம்பரம் வாலிபர்கள் கைது

புதுச்சேரி: புதுவை பெரியகடை சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் பழைய சாராய ஆலை அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாமல் வந்த ஒரு பைக்கை நிறுத்தி, அதில் வந்த 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் கடந்த 24ம் தேதி அதிகாலை செயின்ட் தெரசா வீதியிலிருந்து ஒரு வீட்டுக்கு வெளியே நின்றிருந்த பைக்கை திருடியதும், அந்த வண்டியிலேயே நம்பர் பிளேட் இல்லாமல் இருவரும் வேறு வண்டிகளை திருடலாம் என்று வந்தபோது போலீசிடம் சிக்கிக் கொண்டதும் தெரியவந்தது. தொடர் விசாரணையில் சிதம்பரம் விபுஷ்ணபுரத்தை சேர்ந்த பாலா என்ற பாலகணபதி (18), சிதம்பரம் அம்மாபேட்டையை சேர்ந்த விஜய் (19) என தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப்பதிந்து அவர்கள் இருவரையும் இன்ஸ்பெக்டர் கண்ணன் கைது செய்தார். இருவரும் சேர்ந்து உருளையன்பேட்டை காவல்நிலையத்துக்கு உட்பட்ட நெல்லித்தோப்பு பகுதியில் கடந்த 12ம்தேதி ஒரு பைக்கும், கடலூர் பேருந்து நிலையம் அருகிலிருந்து 14ம்தேதி ஒரு பைக்கும் திருடியதை ஒப்புக்கொண்டனர். வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்களிடம் இருந்து ரூ.2.50 லட்சம் மதிப்பிலான 4 பைக்குகளை போலீசார் கைப்பற்றினர். …

The post புதுச்சேரியில் பைக் திருடிய சிதம்பரம் வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Puducherry ,Sub-Inspector ,Sivasankaran ,
× RELATED சிதம்பரம் அரசு மருத்துவமனையில் இரு குடும்பத்தினர் மோதல்- பரபரப்பு