×

பாலஸ்தீன தூதரகத்தில் இந்திய தூதர் மர்ம மரணம்

புதுடெல்லி: பாலஸ்தீனத்துக்கான இந்திய தூதர் முகுல் ஆர்யா. பாலஸ்தீன்தின் ராமல்லாவில் உள்ள தூதரக அலுவலகத்தில் அவர் நேற்று முன்தினம் இரவு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆர்யா இறந்ததற்கான காரணங்களை இரு நாடுகளும் முழுமையாக தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இந்திய தூதரின் மறைவுக்கு ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ஜெய்சங்கர் தனது டிவிட்டர் பதிவில், ‘‘இந்திய தூதர் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர் மிகவும் திறமை வாய்ந்த அதிகாரியாக இருந்தார். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்….

The post பாலஸ்தீன தூதரகத்தில் இந்திய தூதர் மர்ம மரணம் appeared first on Dinakaran.

Tags : Palestinian ,embassy ,New Delhi ,India ,Mugul Arya ,Ramalla, Palestine ,Palestinian Embassy ,
× RELATED பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்தி...