×

5 மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியீடு உ.பி, மணிப்பூரில் பாஜ, பஞ்சாப்பில் ஆம் ஆத்மி: உத்தரகாண்ட், கோவாவில் இழுபறி

புதுடெல்லி: ஐந்து மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், உபி மற்றும் மணிப்பூரில் பாஜ பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் என்றும், உத்தரகாண்ட் மற்றும் கோவாவில் இழுபறி நிலை இருக்கும் என்றும், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய சட்டப்பேரவைகளின் பதவி காலம் முடிவடைவதையொட்டி, 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை கடந்த ஜனவரி 8ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, உ.பியில் 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாகவும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாகவும், கோவா (40 தொகுதி), உத்தரக்காண்ட் (70 தொகுதி), பஞ்சாப் (117 தொகுதி) ஆகிய 3 மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் 4 மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்தது. உ.பியில் 9 மாவட்டங்களில் உள்ள 54 தொகுதிகளுக்கான 7வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடந்தது. இதில், 56.77% வாக்குகள் பதிவாகின. இதன் மூலம் 5 மாநில தேர்தல் நேற்று மாலை 6 மணியுடன் முடிந்தது. நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.  இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு நேற்று மாலை வெளியானது. இதில், உத்தரபிரதேசம், மணிப்பூரில் பாஜ மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று பல கருத்துக்கணிப்புகள் கணித்துள்ளன. இந்தியா டுடே, டைம்ஸ் நவ், என்டிடிவி, சிஎன்என் நியூஸ் 18, ரிபப்ளிக் டிவி மற்றும் நியூஸ் எக்ஸ் சேனல்களில் வெளியிட்ட கருத்துக் கணிப்புகள்படி, உத்தர பிரதேசத்தில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 210 முதல் 270 இடங்கள் வரையும், சமாஜ்வாடி தலைமையிலான கூட்டணி 110 முதல் 160 இடங்கள் வரையும் கைப்பற்றும் என்று கூறி உள்ளது. இங்கு காங்கிரசுக்கு ஒற்றை இலக்கு வெற்றியே (10க்கும் குறைவான இடங்களே) கிடைக்கும் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதனால், காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். பகுஜன் சமாஜுக்கு இரட்டை இலக்கு தொகுதிகளே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.  பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி 55 முதல் 90 இடங்கள் வரை பிடித்து ஆட்சி பிடிக்கும் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் இரண்டாவது இடத்தையும், 3வது இடத்தை அகாலி தளமும் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தை பொறுத்தவரை காங்கிரஸ் மற்றும் பாஜ ஆட்சியை பிடிக்கும் என சமமான கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. சில ஊடகங்கள் காங்கிரஸ் 30 முதல் 38 இடங்கள் வரை கைப்பற்றும் என்றும், சில ஊடகங்கள் பாஜ 30 முதல் 40 இடங்கள் வரை கைப்பற்றும் என்றும் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. இதனால், வாக்கு எண்ணிக்கை முடிந்தால் மட்டுமே உத்தரகாண்டில் யார் ஆட்சியை பிடிப்பது என்பது தெரியவரும்.  கோவாவில் ஆளும் பாஜ-காங்கிரஸ் கட்சி சமமான இடங்களை கைப்பற்றும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளதால், தொங்கு சட்டசபை அமையும் சூழ்நிலை உருவாகி உள்ளது. பெரும்பாலான கருத்து கணிப்பு முடிவுகள்படி பாஜ, காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளும் சராசரியாக 15 இடங்களை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. இங்கு களம் கண்ட மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரசுக்கு ஒற்றை இலக்கு இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மணிப்பூரில் பாஜ கை ஓங்கி உள்ளது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜ 30க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.  தற்போது நடந்து முடிந்து உள்ள 5 மாநிலங்களில் பஞ்சாப்பில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. மற்ற மாநிலங்களில் பாஜ தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை இழந்து வரும் காங்கிரஸ், பலமாக இருந்த பஞ்சாப்பை பறிகொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. யாரும் எதிர்ப்பாராதவிதமாக டெல்லியை கைப்பற்றிய ஆம் ஆத்மி பஞ்சாப்பில் கால் ஊன்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.* கணிப்பு நிஜமாகாதுதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகும் முன்பாக நேற்று பேட்டி அளித்த சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ‘‘10ம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் ஆளும் பாஜ வெளியேற்றப்படும். முன்கூட்டிய கருத்துக்கணிப்புக்கள் முக்கியமில்லை. அவர்கள் தங்களுக்கு கிடைத்ததை காட்டட்டும். சமாஜ்வாடி தலைமையிலான கூட்டணி சுமார் 300 தொகுதிகளில் வெற்றி பெற்று உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி அமைக்கும்’’ என்றார்.* உ.பி. மொத்த தொகுதி 403டைம்ஸ் நவ்கட்சிகள்    இடங்கள்பாஜ    240சமாஜ்வாடி    140பகுஜன் சமாஜ்    17மற்றவை    6என்டிடிவிகட்சிகள்    இடங்கள்பாஜ    234சமாஜ்வாடி    150பகுஜன் சமாஜ்    13காங்கிரஸ்    4இந்தியா டுடேகட்சிகள்    இடங்கள்பாஜ    288-326சமாஜ்வாடி    71-101பகுஜன் சமாஜ்    3-9காங்கிரஸ்    1-3மற்றவை    2-3ரிபப்ளிக்   கட்சிகள்    இடங்கள்பாஜ    262-272சமாஜ்வாடி    119-134பகுஜன் சமாஜ்    7-15காங்கிரஸ்    3-8மற்றவை    2-6* பஞ்சாப் மொத்த தொகுதி 117டைம்ஸ் நவ்கட்சிகள்    இடங்கள்ஆம் ஆத்மி    83காங்கிரஸ்    24அகாலி தளம்    7பாஜ    2மற்றவை    1இந்தியா டுடேகட்சிகள்    இடங்கள்ஆம் ஆத்மி    76-90காங்கிரஸ்    19-31அகாலி தளம்    7-11பாஜ    1-4மற்றவை    0-2ரிபப்ளிக்கட்சிகள்    இடங்கள்ஆம் ஆத்மி    62-78காங்கிரஸ்    23-31அகாலி தளம்    16-24பாஜ    1-3மற்றவை    1-3என்டிடிவி கட்சிகள்     இடங்கள்ஆம் ஆத்மி    67காங்கிரஸ்    25அகாலி தளம்    18பாஜ    2* கோவா மொத்த தொகுதி 40டைம்ஸ் நவ்கட்சிகள்    இடம்காங்கிரஸ்    16பாஜ    14ஆம் ஆத்மி    4மற்றவை    6இந்தியா டுடேகட்சிகள்    இடம்பாஜ    14-18காங்கிரஸ்    15-20திரிணாமுல்    2-5மற்றவை    0-4என்டிடிவிகட்சிகள்    இடம்பாஜ    14-18காங்கிரஸ்    15-20திரிணாமுல்    2-5மற்றவை    0-4ரிபப்ளிக்கட்சிகள்    இடம்பாஜ    13-17காங்கிரஸ்    13-17ஆம் ஆத்மி    2-6திரிணாமுல்    2-4* உத்தரகாண்ட்  மொத்த தொகுதி 70டைம்ஸ் நவ்கட்சிகள்    இடங்கள்பாஜ    37காங்கிரஸ்     31இந்தியா டுடேகட்சிகள்    இடங்கள்பாஜ     36-46காங்கிரஸ்    20-30என்டிடிவிகட்சிகள்    இடங்கள்பாஜ    34காங்கிரஸ்    32ரிபப்ளிக்கட்சிகள்    இடங்கள்பாஜ    29-34காங்கிரஸ்    33-38* மணிப்பூர்  மொத்த தொகுதி 60டைம்ஸ் நவ்கட்சிகள்    இடங்கள்பாஜ    38காங்கிரஸ்     6இந்தியா டுடேகட்சிகள்    இடங்கள்பாஜ     33-43காங்கிரஸ்    4-8என்டிடிவிகட்சிகள்    இடங்கள்பாஜ    30காங்கிரஸ்    14ரிபப்ளிக்கட்சிகள்    இடங்கள்பாஜ    27-31காங்கிரஸ்    11-17…

The post 5 மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியீடு உ.பி, மணிப்பூரில் பாஜ, பஞ்சாப்பில் ஆம் ஆத்மி: உத்தரகாண்ட், கோவாவில் இழுபறி appeared first on Dinakaran.

Tags : BJP ,Manipur ,Aam Aadmi ,Punjab ,Uttarakhand ,Goa ,New Delhi ,UP ,Aam Aadmi Party ,
× RELATED கை விலங்குக்கு வாக்குகளால் பதிலடி...