×

காதலனை திருமணம் செய்யாத நிலையில் இலியானாவுக்கு ஆண் குழந்தை

சென்னை: தமிழில் ரவிகிருஷ்ணாவுடன் ‘கேடி’ என்ற படத்தில் அறிமுகமான இலியானா, பிறகு ஷங்கர் இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து ‘நண்பன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நிறைய படங்களில் நடித்துள்ள அவர், நாள்தோறும் தனது சமூக வலைத்தளங்களில் தனது போட்டோக்களை வெளியிடுவார். இந்நிலையில், ‘என்னுடைய குட்டி டார்லிங்கை எதிர்பார்த்து காத்திருக் கிறேன். அந்த சாதனை பயணம் தொடங்கி விட்டது’ என்ற பொருள் அடங்கிய வாசகம் இடம்பெற்ற குழந்தை உடையை வெளியிட்டிருந்தார். இலியானாவுக்கு திருமணமாகாத நிலையில், அவர் வெளியிட்ட பதிவு ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.

பிறகு இலியானா தனது காதலனுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டாலும், அவரைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இந்நிலையில், கடந்த 1ம் தேதி தனக்கு மகன் பிறந்ததாக இலியானா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். மகனின் போட்டோவை வெளியிட்டு, ‘Koa Phoenix Dola’ என்று பெயரிட்டுள்ளதாகவும், ‘எங்கள் அன்பு மகனை பூவுலகிற்கு வரவேற்பதில் நாங்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறோம். இதை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.

The post காதலனை திருமணம் செய்யாத நிலையில் இலியானாவுக்கு ஆண் குழந்தை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ileana ,CHENNAI ,Ravikrishna ,Vijay ,Shankar ,Kollywood Images ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...