×

சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசி பதிவு திரைப்பட இயக்குநர் மீது இசையமைப்பாளர் போலீசில் புகார்

சென்னை: சென்னை கோடம்பாக்கம் விஸ்வநாதபுரம் பிரதான சாலையை சேர்ந்தவர் சிவனேஷ் அலியாஸ் ஜோகன்(36). இசையமைப்பாளர்.  சிவனேஷ் அலியாஸ் ஜோகன் நேற்று முன்தினம் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், கே.கே.ஆர். பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு இசையமைப்பாளராக உள்ளேன். புதிய படத்திற்கு ரூ.10 லட்சம் பேசப்பட்டு முன்பணம் ரூ.2 லட்சம் பெற்றுக்கொண்டு பாடலுக்கு இசையமைத்து வந்தேன்.இந்நிலையில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் அவருடைய அனுமதி இல்லாமல் யாரிடமும் முடிக்கப்பட்ட பாடலை கொடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.இதற்கிடையே கடந்த மாதம் 28ம் தேதி திரைப்பட இயக்குநர் சக்தி பாலாஜி தன்னை சந்தித்து பாடலின் இறுதி அவுட் புட்டை கேட்டார். நான் தரவில்லை. இதனால் கடந்த 3ம் தேதி எனது வீட்டிற்கு வந்து ஆபாசமாக பேசி மிரட்டி சென்றார்.அதோடு இல்லாமல் இயக்குநர் சக்திபாலாஜி பேஸ்புக் மற்றும் குறுஞ்செய்திகளில் சிறிய பட்ஜெட் படங்களின் இயக்குநர் வாழ்வைக் கெடுக்க நினைக்கும் இசையாமைப்பாளர் சிவனேஷ் அலியாஸ் ஜோகனை எந்த இயக்குநர்களும் அணுக வேண்டாம். ஏன் என்றால் அவர் பணத்தை வாங்கி கொண்டு ஏமாற்றி விடுவார் என்று பதிவு செய்துள்ளார். எனவே என் புகழை கெடுக்க சமூக வலைத்தளங்களில் அவதூறு பதிவுகளை செய்த இயக்குநர் சக்தி பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்….

The post சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசி பதிவு திரைப்பட இயக்குநர் மீது இசையமைப்பாளர் போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Sivanesh ,Jogan ,Viswanathapuram Main Road, Kodambakkam, Chennai ,Shivnesh Alias Jogan ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?