×

சுடப்பட்ட மாணவர் டெல்லி வந்தடைந்தார்

டெல்லியை சேர்ந்த மாணவர் ஹர்ஜோத் சிங்  உக்ரைனில் படித்து வருகிறார். கடந்த 27ம் தேதி,  இந்தியர்கள் 2 பேருடன் காரில் உக்ரைனை விட்டு வெளியேற முயன்றார். அப்போது கார் மீது துப்பாக்கி சூடு நடந்தது. இதில், ஹர்ஜோத் சிங் படுகாயமடைந்தார். உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஒன்றிய அரசின் ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் ஹர்ஜோத் சிங்  மீட்கப்பட்டு, டெல்லிக்கு அழைத்து வரப்படுவார் என தகவல் வெளியாகியிருந்தது.இந்த நிலையில் இந்திய விமான படையை சேர்ந்த விமானத்தில் ஹர்ஜோத் சிங் உட்பட 200  இந்தியர்கள் நேற்று மாலை ஹிண்டன் விமான தளத்துக்கு  வந்தனர். போலந்தின் ரெஸ்ஸோவில் இருந்து வந்த அந்த விமானத்தில் ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் வி.கே.சிங்கும் இருந்தார் என்று ஒன்றிய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post சுடப்பட்ட மாணவர் டெல்லி வந்தடைந்தார் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Harjot Singh ,Ukraine ,Indians ,
× RELATED கனமழை காரணமாக டெல்லி வசந்த்விஹாரில் புதியகட்டடம் இடிந்து விபத்து!!