×

3ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி..தங்களது நிபந்தனைகளை உக்ரைன் ஏற்கவில்லை என ரஷியா கருத்து!!

மாஸ்கோ : உக்ரைன் – ரஷியா இடையிலான 3ம் கட்ட பேச்சுவார்த்தையிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. உக்ரைன் – ரஷியா இடையிலான முதல் 2 சுற்று அமைதி பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் எட்டப்படாத நிலையில், ரஷிய படைகள் நடத்தும் தாக்குதல் மற்றும் நாளுக்கு நாள் உக்கிரமாகி வருகிறது. இந்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான 3வது சுற்று அமைதி பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பேச்சுவார்த்தை தொடர்பாக உக்ரைன் அதிபரின் ஆலோசகர் மைக்கேல்லோ சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட காணொளியில் நிலைமையை சரிசெய்ய முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றார்.மனிதாபிமான அடிப்படையிலான பணிகளை மேற்கொள்வது தொடர்பாக சில முடிவுகள் எடுக்கப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார். மேலும் ரஷிய படைகள் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ள உதவிகளை நாங்கள் பெறுவோம் என்றும் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை தொடரும் என்றும் அவர் தெரிவித்தார். ரஷிய தரப்பிலும் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை என்றே கூறப்படுகிறது. தங்களது எதிர்பார்ப்புகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படலாம் என்றும் ரஷிய பிரதிநிதி கூறியுள்ளார். இதனிடையே இருநாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் வியாழக்கிழமை துருக்கியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் எட்டப்படலாம் என துருக்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது. …

The post 3ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி..தங்களது நிபந்தனைகளை உக்ரைன் ஏற்கவில்லை என ரஷியா கருத்து!! appeared first on Dinakaran.

Tags : Russia ,Ukraine ,Moscow ,Dinakaran ,
× RELATED ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 10 இளைஞர்கள் நாடு திரும்பினர்