×

உக்ரைன் ராணுவத்தில் இணைந்த தமிழக மாணவர்.. மத்திய, மாநில உளவுத்துறை விசாரணை!!!

கோவை : கோவையைச் சேர்ந்த மாணவர் சாய் நிகேஷ் ரவிச்சந்திரன் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த நிலையில், அதுபற்றி இந்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துடியலூர் அருகில் உள்ள சுப்ரமணிய பாளையத்தில் ரவிச்சந்திரன் – ஜான்சி லட்சுமி தம்பதியின் மூத்த மகன் சாய் நிகேஷ் தான் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி வருகிறான். கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உக்ரைன் நாட்டில் கார்க்கிவ் நகரில் தேசிய விண்வெளி அறிவியல் பல்கலைக்கழகத்தில் அவர் படிக்கச் சென்றார். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வரும் நிலையில், ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் ராணுவத்தில் அவர் சேர்ந்துள்ளார். இதுபற்றி விசாரணை மேற்கொள்ள உளவுத்துறை அதிகாரிகள் கோவையில் உள்ள சாய் நிகேஷ் வீட்டிற்கு சென்று அவர் குறித்த விவரங்களை கேட்டுள்ளனர். இதில் ஏற்கனவே 2 முறை இந்திய ராணுவத்தில் சேர சாய் நிகேஷ் முயன்றதும் ஆனால் உயரம் குறைவு காரணமாக இந்திய ராணுவத்தில் அவரால் சேர முடியாமல் போய்விட்டதும் தெரியவந்துள்ளது. அமெரிக்க ராணுவத்தில் சேரவும் முயற்சித்ததாகவும் தெரிகிறது. வீட்டில் உள்ள சாய் நிகேஷ் அறையை பார்வையிட்ட அதிகாரிகள், அறை முழுவதும் ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு இருப்பதை பார்த்துள்ளனர். சாய் நிகேஷ் குடும்பத்தினர் மட்டுமின்றி அருகில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. போர் தொடுங்குவதற்கு முன்பு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்து இருப்பதாக சாய் நிகேஷ் குடும்பத்தைத் தொடர் கொண்டு கூறியுள்ளார்.சில நாட்களுக்கு மீண்டும் பேசிய அவர், உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து இருப்பதாக கூறியுள்ளார். அப்போது இந்தியா வரும்படி பெற்றோர்கள் கேட்டுக் கொண்டும் சாய் நிகேஷ் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. தனது மகன் தொடர்பான விவரங்களை அதிகாரிகளிடம் அளித்துள்ள சாய் நிகேஷ் பெற்றோர் மகனை பத்திரமாக மீட்டுத் தர ஒன்றிய மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்….

The post உக்ரைன் ராணுவத்தில் இணைந்த தமிழக மாணவர்.. மத்திய, மாநில உளவுத்துறை விசாரணை!!! appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,Ukrainian army ,Coimbatore ,Sai Nikesh Ravichandran ,Indian Intelligence Service ,Dinakaran ,
× RELATED கை, கால் ஊனமுடைய...