×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தனது பதவியை ராஜினாமா செய்த நெல்லிக்குப்பம் நகர்மன்ற துணைத் தலைவர்

கடலூர்: நெல்லிக்குப்பம் நகர்மன்ற துணைத் தலைவர் பதவியை திமுக-வை சேர்ந்த ஜெயபிரபா ராஜினாமா செய்துள்ளார். கடந்த பிப்ரவரி 22-ம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும், முடிவும் அறிவிக்கப்பட்டது. அதில் பெரும்பாலான இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகமே வெற்றி பெற்றிருந்தது.இந்த நிலையில், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சியில் 30 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் திமுக கூட்டணி 18 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், இந்த நகர்மன்றத் தலைவர் பொறுப்பு கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், இரண்டு விடுதலைச் சிறுத்தைகள் கவுன்சிலர்கள் மட்டுமே இருந்த நிலையில், அங்கு திமுக போட்டி வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கூட்டணிக்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சார்பாக வெற்றி பெற்றவர்களை தமிழகத்தின் முதல்வரும், திமுக-வின் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் பதவியை ராஜினாமா செய்ய உத்தரவிட்டு இருந்தார்.  கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகர்மன்ற துணைத் தலைவர் பதவி, வி.சி.க.வுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திமுக-வை சேர்ந்த ஜெயபிரபா தனது நகர்மன்ற துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.  தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் முன்னிலையில் ஜெயபிரபா தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். ஏற்கனவே திமுக-வை சேர்ந்த திருத்துறைப்பூண்டி நகராட்சி துணைத்தலைவர் பாண்டியன் ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. …

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தனது பதவியை ராஜினாமா செய்த நெல்லிக்குப்பம் நகர்மன்ற துணைத் தலைவர் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,BM G.K. ,vice-president ,nellikuppam ,stalin ,Cuddalore ,Dimuga ,Jayabriba ,Nellikupam ,B.C. G.K. ,vice president ,gooseberry ,Dinakaran ,
× RELATED குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப்...