×

பிரபுதேவாவுக்கு பாடிய விஜய் சேதுபதி

சென்னை: சந்தேஷ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சந்தேஷ் நாகராஜ் தயாரிக்க, ‘சிண்ட்ரெல்லா’ வினோ வெங்கடேஷ் எழுதி இயக்கி, பிளாஷ்பேக்கில் இளவரசர் கேரக்டரில் நடித்திருக்கும் படம், ‘வுல்ஃப்’. இது தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. பிரபுதேவாவுக்கு ஜோடியாக அஞ்சு குரியன் நடிக்கிறார். தவிர அனுசுயா பரத்வாஜ், ராய் லட்சுமி, வசிஷ்ட சிம்ஹா, ஆர்ஜே ரமேஷ் நடித்துள்ளனர். அருள் வின்சென்ட் ஒளிப் பதிவு செய்ய, அம்ரேஷ் கணேஷ் இசை அமைத்துள்ளார்.

படம் குறித்து வினோ வெங்கடேஷ் கூறுகையில், ‘இந்தப் படம் வரலாற்றுக் காலத்தில் இருந்து இன்றுவரை பயணிக்கும் அறிவியல் புனைக்கதை. ஹிப்னாடிசம் உளவியல் திரில்லர் படமான இதன் ஷூட்டிங் புதுச்சேரி, சென்னை, பெங்களூரு, அந்தமானில் நடந்துள்ளது. வில்லன், ஹீரோ இருவரும் ஓநாய் குணாதிசயங்களைக் கொண்டிருப்பார்கள். இதில் எந்த ஓநாய் ஜெயிக்கிறது என்பது கதை. இதில் பிரபுதேவாவுக்கு விஜய் சேதுபதி பாடியுள்ள ஒரு பாடல், வரும் 16ம் தேதியன்று வெளியிடப் படுகிறது’ என்றார்.

The post பிரபுதேவாவுக்கு பாடிய விஜய் சேதுபதி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : vijay sethupathi ,Chennai ,Sandesh Nagaraj ,Chandesh Productions ,Vino Venkatesh ,Anju Gurien ,Prabuddeva ,Vijay Sedupathi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இனிமே என் படம் ஓடாதுனு சொன்னாங்க - Vijay Sethupathi Emotional Speech at Maharaja Success Meet