×

வசதியான கணவர் வேண்டாம்: கிரித்தி ஷெட்டி

ஐதராபாத்: இந்தி, தெலுங்கில் நடித்துவிட்டு, ‘தி வாரியர்’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்த கிரித்தி ஷெட்டி, பிறகு ‘கஸ்டடி’ என்ற படத்தில் நடித்தார். தற்போது மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடிக்கும் ‘அஜயண்டே ரண்டாம் மோஷனம்’ படத்தில் ஒப்பந்தமான அவர், தமிழில் ஜெயம் ரவியுடன் சேர்ந்து ‘ஜீனி’ படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில், ‘எனது வருங்கால கணவர் அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என்று யோசிப்பது கிடையாது. அழகாக இருக்க வேண்டாம். என்மீது அதிக பாசமாக இருந்தாலே போதும். அதிக வசதி கொண்டவராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நேர்மையான நல்ல மனம் கொண்டவராக இருந்தாலே போதும்’ என்று கூறியுள்ளார். தன் திருமணத்துக்கு இப்போது எந்தவொரு அவசரமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

The post வசதியான கணவர் வேண்டாம்: கிரித்தி ஷெட்டி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kirti Shetty ,Hyderabad ,Tovino Thomas ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஐதராபாத்தில் புற்றுநோய்க்கு என போலி...