×

கலவை அருகே அரசுப்பள்ளி 6ம் வகுப்பு மாணவி சமாதானப்புறா ஓவியம் வரைந்து அசத்தல்

கலவை :  கலவை அருகே அரசுப்பள்ளி 6ம் வகுப்பு மாணவி சமாதானப்புறா ஓவியம் வரைந்து அசத்தியுள்ளார்.  ராணிப்பேட்டை மாவட்டம், கலவை தாலுகா சொரையூர் கிராமத்துக்கு உட்பட்ட  ரகுநாதபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவி ஜீவிதா 6ம்வகுப்பு படித்து வருகிறார். இவர் சிறுவயது முதலே ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தான் பார்க்கும் காட்சிகளை அப்படியே தத்ரூபமாக வரைந்து வருகிறார். அதேபோல் கடவுள் படங்கள், கடல், சூரியன், மலைகள் போன்ற இயற்கை காட்சிகளையும்  யதார்த்தமாக வரைந்து வருகிறார். மேலும் தேசியக்கொடி, சமாதானப்புறா ஆகியவற்றை வரைந்துள்ளார். பிளாஸ்டிக் பொருட்களால் பூமி பாதிக்கப்படுவதையும், அதை தடுப்பதால் நாளுக்கு நாள் பூமி மீண்டு வருவதையும் விளக்கும் வகையில் ஓவியம் வரைந்து உள்ளார். மாணவியை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்….

The post கலவை அருகே அரசுப்பள்ளி 6ம் வகுப்பு மாணவி சமாதானப்புறா ஓவியம் வரைந்து அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Govt. School ,Makshatha ,Makasa ,Ranipet district ,Dinakaran ,
× RELATED குளத்தூர் அரசு பள்ளியில் பிளஸ் 2...