×

20 கி.மீ. தூரத்தைக் கடக்க 24 மணிநேரம் வேலூர் திரும்பிய மாணவர் தகவல்

வேலூர்: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம், குறிஞ்சி நகரை சேர்ந்தவர் வேந்தன்(20). இவர் உக்ரைனில் மருத்துவம் படித்து வந்தார். தற்போது உக்ரைனில் ரஷ்யாவுடன் போர் நடந்துவருவதால், அவரை இந்திய அரசு மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தது. இதுதொடர்பாக தாயகம் திரும்பிய மாணவர் வேந்தன் கூறியதாவது: என் தந்தை லட்சுமணன், இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர். தாய் உமா மகேஸ்வரி, அரசு மருந்தாளுநர். நான் 2020- 21ம் கல்வியாண்டில் உக்ரைனில் உள்ள உஸ்ஹோரோத் தேசிய பல்கலைக் கழகத்தில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தேன். தற்போது இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். நான் தங்கியிருந்த கல்லூரி விடுதி, போர் நடக்கும் பகுதியில் இருந்து சுமார் 400 கிமீ தொலைவில் உள்ளது. அங்கு எவ்வித போர் குறித்த பதற்றமோ குண்டு வெடிப்போ இல்லை. இதனால் பாதுகாப்பாகவே இருந்தோம். இதையடுத்து வங்கிகள் திடீரென மூடப்பட்டதால், எங்கள் வங்கிக் கணக்குகளில் பணம் இருந்தும் அதை எடுக்க முடியவில்லை. ஏடிஎம் இயந்திரமும் செயல்படவில்லை. செல்போன் சிக்னல் கிடைப்பதில்லை. தமிழகத்தை சேர்ந்த சுமார் 300 மாணவர்கள் என்னுடன் அங்கு எம்பிபிஎஸ் படிக்கின்றனர். மாணவர்கள் தங்கள் கையில் செலவுக்கு வைத்திருந்த பணத்தை பிறருக்கும் கொடுத்து உதவினர். இந்திய அரசு டெல்லி வரையும், அங்கிருந்து சென்னைக்கு தமிழக அரசும் பயண ஏற்பாடு செய்தது. கடந்த 28ம் தேதி உக்ரைனில் உள்ள கல்லூரி பஸ்சில் ஏறி ஹங்கேரி வரை பயணித்தோம். வழியில் 20 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கவே, 24 மணிநேரம் ஆனது. ஹங்கேரியில் இந்திய அரசு சார்பில் தங்க இடம், உணவு போன்ற அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது. ஏற்கனவே கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்பு மூலம் பாடம் கற்பித்ததுபோன்று தற்போதும் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படும் என உக்ரைன் கல்லூரி தெரிவித்தது என்றார்.அரியலூர்அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள அகரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலபாரதி(22). உக்ரைன் நாட்டில் உள்ள உஷார்டு தேசிய பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு மருத்துவ கல்வி பயின்று வருகிறார். இவரும் நேற்று சொந்த ஊருக்கு திரும்பினார். பாலபாரதி கூறுகையில், ‘‘நான் பயின்று வரும் பல்கலைக்கழகம் ஆன்லைன் வழியாக கல்வியை தொடர்ந்து நடத்தவும், போர் பதற்றம் முடிந்தவுடன் தேர்வுகளை நடத்தி  கல்வியை நிறைவு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் உறுதியளித்துள்ளனர். ஒருவேளை மீண்டும் உக்ரைன் சென்று தங்களது மருத்துவ கல்வியை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் ஒன்றிய, மாநில அரசுகள் எங்கள் கல்வியை தொடர்வதற்கு உதவி செய்ய வேண்டும்’’ என்றார்….

The post 20 கி.மீ. தூரத்தைக் கடக்க 24 மணிநேரம் வேலூர் திரும்பிய மாணவர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Vellore District ,K. CV Vandan ,Kubbam ,Kingchi ,Ukraine ,Dinakaran ,
× RELATED 9 மையங்களில் நீட் தேர்வை 5,266 மாணவர்கள்...