×

திருப்பரங்குன்றத்தில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்

திருப்பரங்குன்றம்: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முருகனின் முதல்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு பங்குனி திருவிழா, இன்று காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக சுப்பிரமணியசுவாமி, தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் கொடிமரம் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.இன்று துவங்கும் விழா மார்ச் 23ல் நிறைவடைகிறது. திருவிழா நாட்களில் தினந்தோறும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் அன்னம், தங்க மயில், பச்சைக்குதிரை, தங்க குதிரை, சேஷ வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு சுவாமி மற்றும் அம்மன் காட்சியளிப்பர். விழா முக்கிய நிகழ்வாக வரும் 20ம் தேதி மாலை பட்டாபிஷேகமும், 21ம் தேதி காலை திருக்கல்யாண வைபவமும் நடைபெறும். பங்குனி தேரோட்டம்  வரும் 22ம் தேதி காலை நடைபெறும். தேரில் சிறப்பு அலங்காரத்தில் தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி எழுந்தருள்வார். ெதாடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, சுமார் 3 கிமீ நீளமுள்ள கிரிவலப்பாதையை சுவாமி வலம் வருவார். தேரோட்டத்தில் திருப்பரங்குன்றம், சுற்று வட்டார கிராமங்கள், மதுரை மற்றும் வெளியூரை சேர்ந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்வர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது….

The post திருப்பரங்குன்றத்தில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Panguni festival ,Tiruparangunram ,Tiruparangunram: ,Subramaniaswamy ,Madurai ,Murugan ,Tiruparangundram ,
× RELATED திருப்பரங்குன்றத்தில் வந்தே பாரத் ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழப்பு!