×

ஊத்துக்கோட்டை, திருத்தணியை சேர்ந்தவர்கள் உக்ரைனில் சிக்கி தவித்த மாணவன், மாணவி மீட்பு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை திருவள்ளூர் சாலை பாலாஜி நகரை சேர்ந்தவர் சுனில் முகமது. இவரது மகன் சமீர் அகமது(18), உக்ரைனில் மருத்துவ படிப்பிற்காக கடந்த 3 மாதத்திற்கு முன்பு சென்றார். இந்நிலையில், கடந்த மாதம் 24ம் தேதி முதல் உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கியது. இதில், இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, ஊத்துக்கோட்டை மாணவன் சமீர் அகமது உக்ரைனில் இருந்து 1,600 கிலோ மீட்டர் ரயிலில் பயணம் செய்து போலந்து நாட்டிற்கு வந்து, அங்கிருந்து இந்தியா (டெல்லி) வந்துள்ளார். அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை வந்து பின்னர் நள்ளிரவு ஊத்துக்கோட்டை வந்து சேர்ந்தார். திருத்தணி: திருத்தணி – சென்னை பைபாஸ் சாலையை சேர்ந்தவர் சிவகுமார். ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவரது முதல் மகள் சாய் லட்சுமி(19). இவர் உக்ரைனில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று சாய் லட்சுமி இந்தியா திரும்பி அங்கிருந்து வீடு வந்து சேர்ந்தார். அவர் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்ததுடன் மேலும் தங்களுக்கு மருத்துவப் படிப்பு பாதிப்பு ஏற்படாமல் வகையில் அரசுகள் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி கோரிக்கை வைத்துள்ளார்….

The post ஊத்துக்கோட்டை, திருத்தணியை சேர்ந்தவர்கள் உக்ரைனில் சிக்கி தவித்த மாணவன், மாணவி மீட்பு appeared first on Dinakaran.

Tags : Poothukkotta ,Ukraine ,Sunil Mohammed ,Balaji Nagar, Thiruvallur Road ,Samir Ahmed ,Putty ,
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...