×

காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயராக காங்கிரசை சேர்ந்த குமரகுருநாதன் போட்டியின்றி தேர்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குமரகுருநாதன் போட்டியின்றி தேர்வானார். காஞ்சிபுரம் மாநகராட்சி 22வது வார்டு பதவிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட குமரகுருநாதன் 1014 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் கடந்த 1999ம் ஆண்டு மாணவர் காங்கிரஸ் உறுப்பினராக தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார். 20 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகள் வகித்து வந்த இவருக்கு, கடந்த 2018ம் ஆண்டு காங்கிரசில் காஞ்சிபுரம் மாவட்ட பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்த பணியையும் அவர் சிறப்பாக செய்து வந்தார்.இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 22வது வார்டில் போட்டியிட்ட குமரகுருநாதன் வெற்றிபெற்றார். காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு திமுக தலைமை ஒதுக்கியதால் குமரகுருநாதனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து, கடந்த 4ம் தேதி நடந்த மறைமுக தேர்தலில் குமரகுருநாதன் காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் காஞ்சிபுரம் மாநகராட்சி முதல் துணை மேயர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவருக்கு காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவருக்கு, காஞ்சிபுரத்தில் 3 இடத்தில் ரமணா என்ற ஓட்டல் உள்ளது….

The post காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயராக காங்கிரசை சேர்ந்த குமரகுருநாதன் போட்டியின்றி தேர்வு appeared first on Dinakaran.

Tags : Kumaragrunathan ,Congress ,Deputy Mayor ,Kanchipuram Corporation ,Kanchipuram ,Congress party ,Kanchipuram Municipal Corporation ,22nd Ward… ,Kumaragurunathan ,Dinakaran ,
× RELATED திமுக-காங்கிரஸ் கூட்டணி கொள்கை...