×

திருப்பூர் அடகு கடையில் 3 கிலோ தங்க நகை கொள்ளையில் பீகார் வாலிபர்கள் 4 பேர் கைது: நகைகள், 28 கிலோ வெள்ளி, ரூ.14.5 லட்சம் பறிமுதல்

திருப்பூர்: திருப்பூரில் அடகு கடையில் தங்கம், வெள்ளி மற்றும் ரூ.25 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற பீகாரை சேர்ந்த 4 பேர் மகராஷ்டிராவில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ தங்கம், 28 கிலோ வெள்ளி மற்றும் ரூ.14.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பூரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (49). இவர், அவரது வீட்டிற்கு முன் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 4ம் தேதி காலை கடையை திறக்க சென்றபோது பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே ரேக்குகளில் இருந்த தங்க நகைகள், வெள்ளி நகைகள் மற்றும் ரொக்க பணம் கொள்ளை போயிருந்தது. இது குறித்து அவர் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அப்போது 3 கிலோ தங்க நகைகள், 9 கிலோ வெள்ளி நகைகள், ரூ.25 லட்சம் ரொக்கம் கொள்ளை போனதாக தெரிவித்திருந்தார். திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது 4 பேர் கொண்ட கும்பலின் உருவம் பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் விசாரணையை தொடங்கினர். அருகிலேயே திருப்பூர் ரயில் நிலையம் இருப்பதால் கொள்ளையர்கள் ரயிலில் தப்பித்திருக்கலாம் என கருதி அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டதில் 4 பேர் பேக்குகளுடன் அவசரமாக ரயிலில் ஏறி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இக்கும்பலை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. இதில், ஒரு தனிப்படை சென்னைக்கும், மற்றொரு தனிப்படை மகாராஷ்டிராவிற்கும் விரைந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கொள்ளை கும்பல் சென்னையில் இருந்து திரிபுராவிற்கு ரயிலில் சென்றது தெரியவந்தது. தகவலின்படி மகாராஷ்டிரா பல்லர்பூர்நகரம் பாலர்ஷா ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் அந்த 4 நபர்களை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த மாதப் ஆலம் (37), பத்ரூல் (20), முகமது சுபான் (30), திலாகஸ் (20) என்பதும், திருப்பூர் அடகு கடையில் கொள்ளையடித்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார், 3 கிலோ 306 கிராம் தங்கம் மற்றும் 28 கிலோ வெள்ளி, ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரையும் திருப்பூர் தனிப்படை போலீசாரிடம், மகாராஷ்டிரா போலீசார் ஒப்படைத்தனர்….

The post திருப்பூர் அடகு கடையில் 3 கிலோ தங்க நகை கொள்ளையில் பீகார் வாலிபர்கள் 4 பேர் கைது: நகைகள், 28 கிலோ வெள்ளி, ரூ.14.5 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Bihar Valipers ,Tiruppur Pawn ,Shop ,Tiruppur ,Bihar ,Pawn Shop ,
× RELATED பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்