×

உக்ரைனில் இருந்து தப்பித்து ருமேனியாவுக்கு பஸ்சில் 1000 கி.மீ. பயணம் செய்தோம்: வால்பாறை திரும்பிய 3 மாணவிகள் பேட்டி

வால்பாறை: உக்ரைனில் இருந்து தப்பித்து 1000 கி.மீ. பஸ்சில் பயணம் செய்து ருமேனியாவுக்கு வந்து அங்கிருந்து விமானத்தில் மும்பை சேர்ந்தோம் என்று வால்பாறை திரும்பிய மாணவிகள் 3 பேர் தெரிவித்தனர். கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த மாணவிகள் வர்ஷா, தீபிகா, மோகனா ஆகியோர் உக்ரைனில் மருத்துவம் படித்து வந்தனர். இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து குண்டு மழை பொழிந்து வருகிறது. இதனால், அங்குள்ள மாணவர்கள் மற்றும் இந்தியர்களை மீட்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, இந்தியர்கள் பலர் மீட்கப்பட்டு வருகின்றனர்.  இந்நிலையில் வால்பாறை மாணவிகள் 3 பேரும், உக்ரைனில் இருந்து பஸ் மூலம் ருமேனியா சென்று அங்கிருந்து விமானத்தில் மும்பை வந்தனர். பின்னர், மும்பையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தனர்.  வால்பாறை திரும்பிய மாணவிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.இது குறித்து மாணவிகள் கூறுகையில்,“கடந்த சில நாட்களுக்கு முன்பு நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் குண்டு வெடித்தது. அந்த தீப் பிழம்பை நாங்கள் பார்த்து திகிலடைந்தோம். மேலும், அங்குள்ள மிகப்பெரிய 2 அணுமின் நிலையத்தில் கசிவு ஏற்பட்டது. இதனால், நாங்கள் மிகுந்த அச்சத்தில் இருந்தோம். எங்களை கல்லூரி நிர்வாகம் பஸ்சில் அனுப்பி வைத்தது. சுமார் 1000 கி.மீ. தூரம் பஸ்சில் பயணம் செய்து ருமேனியா எல்லை அடைந்தோம். இந்திய தூதரகத்தின் உதவியால்  விமானத்திற்காக காத்திருந்து மும்பை வந்தடைந்தோம். மும்பையில் இருந்து கோவை வந்துள்ளோம். எங்களுக்காக குரல் கொடுத்த வால்பாறை நண்பர்கள், பெற்றோருக்கு ஊக்கம் அளித்த அனைவருக்கும், எங்களை மீட்ட ஒன்றிய, மாநில அரசுகளுக்கும் நன்றி என்றனர்….

The post உக்ரைனில் இருந்து தப்பித்து ருமேனியாவுக்கு பஸ்சில் 1000 கி.மீ. பயணம் செய்தோம்: வால்பாறை திரும்பிய 3 மாணவிகள் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Ukraine ,Romania ,Valparai ,Mumbai ,Dinakaran ,
× RELATED அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள...