×

யுவனுடன் இணைந்த கார்த்தி

விஷால் நடித்த ‘இரும்புத்திரை’, சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ’ ஆகிய படங்களை தொடர்ந்து கார்த்தி நடித்த ‘சர்தார்’ படத்தை இயக்கியவர், பி.எஸ்.மித்ரன். இதில் ராசி கன்னா, ரஜிஷா விஜயன், லைலா நடித்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்தார். கடந்த ஆண்டு அக்டோபரில் திரைக்கு வந்த இப்படம் 100 கோடி ரூபாய் வசூலித்தது. படத்தின் கிளைமாக்சில் 2ம் பாகத்துக்கான லீட் இடம்பெற்ற நிலையில், தற்போது 2ம் பாகத்துக்கான பணிகள் தொடங்கியுள்ளது. ‘சர்தார்’ படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ், ’சர்தார் 2’ படத்தை தயாரிக்கிறது. முதல் பாகத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன், 2ம் பாகத்தை இயக்குகிறார்.

யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். தற்போது ’ஜப்பான்’ படத்தில் நடித்துள்ள கார்த்தி, அடுத்து நலன் குமாரசாமி இயக்கத்தில் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் வேடத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ‘96’ பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தையும், ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தையும் இயக்கி முடித்துவிட்டு, லோகேஷ் கனகராஜ் எப்போது சொல்கிறாரோ அப்போது ‘கைதி 2’ படத்தில் கார்த்தி நடிக்கிறார்.

The post யுவனுடன் இணைந்த கார்த்தி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Karthi ,Yuvan ,Vishal ,Sivakarthikeyan ,P.S.Mithran. ,Raashi Khanna ,Rajisha Vijayan ,Laila ,GV Prakash Kumar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...