×

செல்வராகவன், யோகிபாபு இணையும் படம்

சென்னை: இயக்குநர் செல்வராகவன் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். பீஸ்ட், சாணிக்காகிதம், பரகாசூரன், ‘பர்ஹானா’ உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் முக்கிய வேடங்களிலும் நடித்தார். இதையடுத்து விஷாலின் மார்க் ஆண்டனி படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் கதையின் நாயகனாக மீண்டும் ஒரு படத்தில் செல்வராகவன் நடிக்கிறார். இதில் இன்னொரு ஹீரோவாக யோகிபாபு நடிக்கிறார். இதில் ஒளிப்பதிவாளர், நடிகர் மற்றும் இயக்குனர் ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி மேனன் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தை புதியவர் ரங்கநாதன் இயக்குகிறார். சுனில், ஷைன் டாம் சாக்கோ, ராதாரவி, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மொமென்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். அரசியல் பின்னணியில் இந்த படத்தின் கதை அமைந்துள்ளதாக பட வட்டாரங்கள் தெரிவித்தன.

The post செல்வராகவன், யோகிபாபு இணையும் படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Selvaraghavan ,Yogibabu ,Chennai ,Beast ,Vishal ,Mark Antony ,Yogi Babu ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடிய...