×

பக்தர்களின் அமைதியான தரிசனத்திற்காக திருச்செந்தூர் கோயிலில் சிறப்பு காவல் படைப்பிரிவு பாதுகாப்பு

மதுரை:  திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் திருசுதந்திரராக பணியாற்றும் சீதாராமன் என்பவர், தன் மீதான நடவடிக்ைகயை ரத்து செய்யக்கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இடையூறின்றி அமைதியான முறையில் தரிசனத்திற்கு செல்வதற்கு உகந்த சூழல் இல்லை. எனவே, கோயிலின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு டிஜிபி மற்றும் தூத்துக்குடி எஸ்பி ஆகியோரை எதிர்மனுதாரர்களாக இந்த நீதிமன்றம் சேர்க்கிறது. திருச்செந்தூர் கோயிலுக்குள் திருசுதந்திரர்கள் மற்றும் கோயில் பணியாளர்களாலும் பக்தர்கள் பெரும் இடையூறை சந்திப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் அமைதியான முறையில் தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது. கோயிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பிற்காக 125 பேரைக் ெகாண்ட தமிழ்நாடு சிறப்பு காவல் படைப் பிரிவை பணியில் ஈடுபடுத்த டிஜிபியும், எஸ்பியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மார்ச் 7 முதல் இந்த படைப்பிரிவினர் பாதுகாப்பில் ஈடுபட வேண்டும். இவர்கள் கோயிலின் உள்ளேயும், வெளியிலும் பாதுகாப்பில் ஈடுபட வேண்டும்.  இவ்வாறு நீதிபதி உத்தர விட்டார். …

The post பக்தர்களின் அமைதியான தரிசனத்திற்காக திருச்செந்தூர் கோயிலில் சிறப்பு காவல் படைப்பிரிவு பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruchendur temple ,Madurai ,Seetharaman ,Thirusudanthar ,Tiruchendur ,Subramania Swamy Temple ,ICourt ,
× RELATED திருச்செந்தூர் கோயிலுக்கு ராஜகோபுரம்...