×

கிராம மக்களை மூளை சலவை செய்ததாக கைது பெண் மாவோயிஸ்ட்டிடம் 3 நாள் போலீஸ் காவலில் விசாரணை

ஊட்டி: மூன்று நாட்கள் விசாரணைக்காக பெண் மாவோயிஸ்ட் சாவித்திரியை கொலக்கொம்பை போலீசார் காவலில் எடுத்தனர்ஊட்டி அருகேயுள்ள நெடுகல்கம்பை பழங்குடியின கிராமத்திற்கு கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரம் 1ம் தேதி  வந்த மாவோயிஸ்ட் கும்பல் அங்குள்ள மக்களை மூளை சலவை செய்யும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்த கொலக்கொம்பை போலீசார், அந்த கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக நெடுகல்கம்பை கிராமத்திற்கு வந்து  சென்ற 7 மாவோயிஸ்ட்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் கேரள மாநிலத்தில் சாவித்திரி என்ற பெண் மாவோயிஸ்ட் கைது செய்யப்பட்டார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர், 2016ம் ஆண்டு நெடுகல்கம்பை பகுதிக்கு வந்து சென்றதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து, கொலக்கொம்பை போலீசார் இவரை கேரள மாநிலம் திருச்சூர் வையூர் சிறையில் இருந்து விசாரணைக்காக அழைத்து வந்து நேற்று ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். இதனை ஏற்ற நீதிபதி சஞ்சய்பாபா, மாவோயிஸ்ட் சாவித்திரியிடம் 3 நாட்கள் காவலில் விசாரணை மேற்கொள்ள அனுமதியளித்தார். …

The post கிராம மக்களை மூளை சலவை செய்ததாக கைது பெண் மாவோயிஸ்ட்டிடம் 3 நாள் போலீஸ் காவலில் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Maoist ,Ooty ,Savithiri ,Kolakkombai ,Nedugalkambai ,
× RELATED ஊட்டி நகர் பகுதியில்...