×

மொபட் திருடிய பெண்ணுக்கு வலை

திருவொற்றியூர்: எண்ணூர் நேரு நகரை சேர்ந்த எல்லப்பன் (50), நேற்று முன்தினம் இரவு தனது மொபட்டை வீட்டின் வெளியே நிறுத்தி விட்டு சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது, மொபட்டை காணவில்லை. இதுகுறித்து, எண்ணூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், ஒரு இளம்பெண் மொபட்டை திருடி செல்வது பதிவாகியிருந்தது.  இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மொபட்டை திருடிச் சென்ற இளம்பெண்ணை தேடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று எர்ணாவூர், காமராஜர் நகர், தனியார் மண்டபம் அருகே, மாயமான மொபட் நிறுத்தப்பட்டு இருந்தது. அதை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். அதை திருடிய இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.  …

The post மொபட் திருடிய பெண்ணுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Ellappan ,Nehru Nagar, Ennore ,Dinakaran ,
× RELATED எந்தக் கிரகம் நல்லது செய்யும்?