×

‘ரஷ்ய அதிபர் புதினை கொல்வது அமெரிக்காவின் நோக்கம் அல்ல’: செனட்டரின் சர்ச்சை பேச்சுக்கு வெள்ளை மாளிகை விளக்கம்..!!

வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் புதினை கொல்வது, ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது அமெரிக்காவின் நோக்கம் அல்ல என்று வெள்ளை மாளிகை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் புதின் கொல்லப்பட வேண்டும் என்று குடியரசு கட்சியின் செனட் உறுப்பினர் லென்ஸே ஆபிரகாம் பேசிய மறுநாளே வெள்ளை மாளிகையில் இருந்து இந்த அவசர விளக்கம் வெளியாகியுள்ளது. ரஷ்யாவுடன் அமெரிக்கா ஒருபோதும் போரிடாது என்றும் அவ்வாறான திட்டமோ, கொள்கையோ அல்லது எண்ணமோ சிறிதளவும் இல்லை என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது. எனிமும் மாற்று வழிகளில் புதினுக்கு அழுத்தம் கொடுப்பதுடன் போர் நிறுத்தத்தை அமல்படுத்துவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. உக்ரைன் வான்வெளியை விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்காவும், நேட்டோவும் திட்டவட்டமாக நிராகரித்துள்ளன. அது ரஷ்யாவுடன் போருக்கு வழிவகுத்துவிடும் என்பதே அதற்கு காரணம். அமெரிக்காவில் கடந்த 1ம் தேதி முதல் உக்ரேனியர்கள் அடுத்த 18 மாதங்கள் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் 30,000 உக்ரேனியர்கள் பலனடைவார்கள். அதேநேரத்தில் ஐ.நா. பாதுகாப்பு அவை, பொதுச்சபை, மனித உரிமைகள் ஆணையம் ஆகிய அனைத்திலும் வாக்கெடுப்பில் நடுநிலை வகித்த இந்தியாவை ரஷ்யாவிடம் இருந்து விலகி இருக்குமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து விலகுவதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இந்தியா புரிந்துகொள்ளும் என்று நம்புவதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதுகுறித்து பேசிய வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி, அப்பாவி மக்களை வெளியேற்றும் வழி, போர் நிறுத்தம் உள்ளிட்ட அனைத்து முயற்சிகளும் வரவேற்கப்படும். ஆனால், வெளிநாட்டுத் தலைவர் ஒருவரை கொள்வதோ, வேறொரு நாட்டில் ஆட்சி மாற்றம் செய்வதோ நமது நோக்கம் அல்ல. அமெரிக்காவின் கொள்கை அதுவல்ல என்று கூறினார்….

The post ‘ரஷ்ய அதிபர் புதினை கொல்வது அமெரிக்காவின் நோக்கம் அல்ல’: செனட்டரின் சர்ச்சை பேச்சுக்கு வெள்ளை மாளிகை விளக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : White House ,Washington ,United ,States ,Chancellor ,Newn ,Russia ,
× RELATED டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான...