×

அரியலூர் அருகே மாளிகைமேடு அகழ்வாராய்ச்சியில் 7.920 கிராம் வளையல் காப்பு கண்டெடுப்பு

அரியலூர் : அரியலூர் அருகே மாளிகைமேடு அகழ்வாராய்ச்சியில் 7.920 கிராம் வளையல் காப்பு கண்டெடுக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் அருகே மாளிகைமேடு தொல்லியல் தளத்தில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியினை கடந்த மாதம் முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த அகழ்வாராய்ச்சியில் 7.920 கிராம் எடையுள்ள வளையல் 170 செ.மீ ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டது. 4.9 செ.மீ நீளம் மற்றும் 4 மி.மீ தடிமன் கொண்ட வளையல் போன்ற காப்பு உடைந்த நிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.கங்கைகொண்டசோழபுரம் அருகே உள்ள தொல்லியல் தளத்தில் இரண்டாம் சுற்று அகழ்வாராய்ச்சியில் கிடைத்த முதல் கண்டுபிடிப்பு இதுவாகும். கல்வெட்டு ஆதாரங்களின் உதவியுடன், மாளிகைமேட்டில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட அகழ்வாராய்ச்சியில் செங்கல் அமைப்பு மற்றும் ஏராளமான அலங்கரிக்கப்பட்ட கூரை ஓடுகள் வடிவில் அரசஅரண்மனையின் கட்டமைப்பு எச்சங்கள் கண்டறியப்பட்டன. இதுவரை தளத்தில் கிடைத்த பழங்கால பொருட்களில் செப்பு நாணயங்கள் மற்றும் செம்பு பொருட்கள், இரும்பு ஆணிகள், கண்ணாடி மணிகள் மற்றும் வளையல்கள், அலங்கரிக்கப்பட்ட கற்கள் மற்றும் சீன பொருட்கள் அடங்கும்….

The post அரியலூர் அருகே மாளிகைமேடு அகழ்வாராய்ச்சியில் 7.920 கிராம் வளையல் காப்பு கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Majalimedu ,Ariyalur ,Gangaikondacholapuram, Ariyalur district ,Dinakaran ,
× RELATED அதிமுக மாஜி எம்எல்ஏ காரில் ரூ.50ஆயிரம் திருட்டு