×

உக்ரைன் – ரஷ்யா மோதலில் ‘நேட்டோ’ களம் இறங்கினால் மிகப் பெரிய போர் ஏற்படும்!

பிரஸ்ஸல்ஸ்: உக்ரைன் – ரஷ்யா மோதலில் ‘நேட்டோ’ படைகள் களம் இறங்கினால் மிகப் பெரிய போர் ஏற்படும் என்று நேட்டோ பொதுச்செயலாளர் தெரிவித்தார். உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அன்டோயின் பிளின்கன் மற்றும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூட்டத்தில் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு பின் ஸ்டோல்டன்பெர்க் கூறுகையில், ‘உக்ரைனில் ரஷ்யப் படைகள் கடுமையான தாக்குதலை முடுக்கிவிட்டுள்ளது. முக்கிய நகரங்கள் மற்றும் பிற தளங்கள் மீது குண்டுவீசித் தாக்கி வருகிறது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான உக்ரைன் மக்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றி உள்ளனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதலாகும். இதுபோன்ற மனித துன்பங்களையும், அழிவுகளையும் நாம் பார்த்ததில்லை. நேட்டோ தனது போர் விமானங்களை உக்ரேனிய வான்வெளியில் பறக்கவிட வேண்டும்  என்றும், ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்த வேண்டும் என்றும் சில  நாடுகள் கூறுகின்றன. அதற்காக விமானத் தடைப் பகுதியை அறிவிக்க வேண்டும்  என்கின்றனர். ஆனால் உக்ரைனுக்குள் நேட்டோப் படைகள் போகாது. தரையிலோ அல்லது வான்வெளியிலோ தடை செய்யப்பட்ட பகுதிகளை அமல்படுத்த மாட்டோம். அவ்வாறு செய்தால் ஐரோப்பாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான மிகப் பெரிய போரை ஏற்படுத்திவிடும். நேட்டோவில் 30 உறுப்பு நாடுகள் உள்ளன. ஒரு உறுப்பு நாடு மீது தாக்குதல் நடந்த அந்த நாட்டை பாதுகாக்க மற்ற உறுப்பு நாடுகள் முன்வருவார்கள். ஆனால் தற்போதைய நிலைமை அப்படியில்லை. அதேநேரம், நேட்டோ போர்க்கப்பலை ரஷ்யப் படைகள் சுட்டு வீழ்த்தினால் அதற்கு பதிலடி கொடுக்கப்படும். உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா நிறுத்தாவிட்டால், அந்நாட்டுக்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும்’ என்றார். குண்டுவீச்சுக்கு பச்சைக்கொடிநேட்டோ உறுப்பு நாடுகளின் முடிவு குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், ‘நேட்டோ உறுப்பு நாடுகள் உக்ரைனில் விமான தடைப் பகுதியை அறிவிக்க மறுத்துள்ளன. இதனால் ரஷ்யப் படைகள் உக்ரைனுக்கு எதிராக தாக்கதல் நடத்த வாய்ப்பாக அமையும். போரால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்த நேட்டோ, வேண்டுமென்றே  உக்ரைனில் விமான தடைப் பகுதியை மூட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது. இதன் மூலம் உக்ரைன் மீதான குண்டுவீச்சுக்கு நேட்டோ நாடுகள் பச்சைக்கொடி காட்டியுள்ளன’ என்றார். …

The post உக்ரைன் – ரஷ்யா மோதலில் ‘நேட்டோ’ களம் இறங்கினால் மிகப் பெரிய போர் ஏற்படும்! appeared first on Dinakaran.

Tags : NATO ,Ukraine ,-Russia ,Brussels ,Russia ,Dinakaran ,
× RELATED உக்ரைனின் கார்கிவ் நகரில் அமைந்த முதல் ‘பங்கர் பள்ளி