×

ஆக்கிரமிப்பில் இருந்து ரூ.3 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் மீட்பு: அறநிலைய துறை நடவடிக்கை

சென்னை: பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் சுப்பிரமணிய சுவாமி கோயில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோயிலுக்கு சொந்தமாக ரூ.3 கோடி மதிப்புள்ள சுமார் 2 கிரவுண்ட் காலி நிலம், பூந்தமல்லி பைபாஸ் சாலையை ஒட்டி உள்ளது. இந்த நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து வைத்திருப்பதாக, அறநிலையத்துறைக்கு புகார்கள் வந்தன. அதன் பேரில், அதிகாரிகள் அங்கு ஆய்வு நடத்தினர். அதில், கோயில் நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கோயில் செயல் அலுவலர் சரவணன், அறநிலையத்துறை தாசில்தார் பிரீத்தி ஆகியோர் தலைமையில் கோயில் பணியாளர்கள், அறநிலைய துறை ஊழியர்கள் நேற்று, அந்த நிலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதை பயன்படுத்தி வந்த தனி நபர்கள் சிலர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். பின்னர், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கோயில் நிலம் மீட்கப்பட்டது. பின்னர், அங்கு கோயிலுக்கு சொந்தமான நிலம் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது….

The post ஆக்கிரமிப்பில் இருந்து ரூ.3 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் மீட்பு: அறநிலைய துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Charity department ,CHENNAI ,Poontamalli ,Senneerkuppam Subramanya Swamy Temple ,Charities Department ,Dinakaran ,
× RELATED நெல்லை முத்துமாலை அம்மன் கோயில்...