×

ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடும் ரித்திகா சிங்

சென்னை: குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் ‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து விஜய் சேதுபதி ஜோடியாக ‘ஆண்டவன் கட்டளை’ ராகவா லாரன்ஸ் உடன் ‘சிவலிங்கா’ அசோக் செல்வன் நடித்த ’ஓ மை கடவுளே’, சமீபத்தில் ‘கொலை’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ‘கிங் ஆஃப் கோதா’ படத்தில் ஒரு பாடலுக்கு ரித்திகா சிங் கவர்ச்சியாக நடனம் ஆடியுள்ளார். ‘கிங் ஆஃப் கோதா’ படத்தில் துல்கர் சல்மானுடன் ஐஸ்வர்யா லட்சுமி, சபீர், பிரசன்னா, அனிகா சுரேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை அபிலாஷ் ஜோஸ்லே இயக்கியுள்ளார். ஹோம்லி வேடங்களில் மட்டுமே நடித்து வந்த ரித்திகா சிங், கவர்ச்சி உடையில், கிளாமராக நடிப்பது இதுவே முதல் முறையாகும். இதைப் பார்த்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ரித்திகா சிங்கை விமர்சித்து வருகிறார்கள். கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் எனக் கூறும் நடிகைகள் ஒரு கட்டத்தில் தங்களது சொல்லை காப்பாற்ற முடியாமல் போகிறார்கள் என நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார்.

The post ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடும் ரித்திகா சிங் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ritika Singh ,Chennai ,Vijay Sethupathi ,Raghava Lawrence ,Ashok Selvan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED விஜய் சேதுபதி 51 ஷூட்டிங் முடிந்தது