திருவனந்தபுரம்: பங்குனி உத்திர திருவிழா மற்றும் மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 8ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. 9ம் தேதி காலையில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர்.பங்குனி உத்திர திருவிழாவையொட்டி மாத பூஜையும் சேர்ந்து வருவதால் 9ம் தேதி முதல் 19ம் தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் நடை திறந்திருக்கும். பங்குனி மாத பூஜைகள் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த 11 நாட்களிலும் தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இந்நிலையில், தரிசன முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது….
The post பங்குனி உத்திர திருவிழா சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது appeared first on Dinakaran.