×

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை: 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துறை நெருஞ்சாலங்குடி கிராமத்தில் பகுதியை சேர்ந்த ஏகாம்பரம்பிள்ளை பண்ணையாரின் மனைவி கமலா, கணவர் இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கமலா, தன்னுடைய வீட்டில் நகை மற்றும் பணம் ஆகியவற்றை வைத்திருந்த நிலையில், வீட்டை பூட்டி விட்டு திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று திருச்சி சென்ற கமலா இன்று அதிகாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து கமலா லால்குடி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில் 100 சவரன் தங்க நகைகள், 12 லட்சம் ரொக்கம், 15 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து லால்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் 3 தனிப்படைகள் அமைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடும் பணியில் போலீசார்  ஈடுபட்டுள்ளனர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் கொள்ளையர்கள் யார் என்பது குறித்து லால்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் கொள்ளையர்கள் அடையாளம் பதிவாகி உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

The post திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை: 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : TRICHI ,Trichy ,Kamala ,Ekambarampillai Ranjalangudi ,Manthura Nerujalangudi ,Lalgudi, Trichy district ,
× RELATED திருச்சி முக்கொம்பில் இருந்து...