×

திருச்சி அருகே துணிகரம் பண்ணையார் வீட்டின் பூட்டை உடைத்து 120 பவுன், ரூ.12 லட்சம் கொள்ளை: 15கிலோ வெள்ளி பொருட்களும் அபேஸ்

திருச்சி: திருச்சி அருகே பண்ணையார் வீட்டின் பூட்டை உடைத்து 100 பவுன் நகைகள், 15 கிலோ வெள்ளி, ரூ. 12 லட்சம் ரொக்கத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, 3 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துறை நெருஞ்சாலங்குடி கிராமத்ைத சேர்ந்தவர் ஏகாம்பரம்பிள்ளை. பண்ணையார். இவரது மனைவி கமலா(63). இவர்களுக்கு 4 மகள்கள். 3 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. ஒரு மகள் மனவளர்ச்சி குன்றியவர். அவர் ஒரு வருடத்துக்கு முன் இறந்துவிட்டார். மூத்த மகள் விருத்தாசலத்திலும், இளைய மகள் விசாலி திருச்சி அண்ணாமலை நகரிலும், மற்றொரு மகளும் திருச்சியில் கணவருடன் வசித்து வருகின்றனர்.ஏகாம்பரம் இறந்து 3 ஆண்டுகளாகிறது. இதனால் கமலா தனியாக வசித்து வருகிறார். அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவர் அடிக்கடி வீட்டை பூட்டிவிட்டு இளைய மகள் விசாலி வீட்டுக்கு சென்று வருவார். அதன்படி கடந்த 15 நாட்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு அவர் மகள் விசாலி வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே ஜன்னல்கள், அறை கதவுகளும், பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த வளையல், செயின், ஆரம் உள்பட 120 பவுன் நகைகள், ரூ.12லட்சம் ரொக்கம், 15 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது.இதுகுறித்து கமலா லால்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். டிஎஸ்பி சீதாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதே தெருவில் கடந்த 25ம் தேதி ஆசிரியர் தமிழ்சுந்தரி வீட்டில் கொள்ளைபோனது. அதே நாள் கமலா வீட்டின் பின்புறம் உள்ள வயலில் 5 ரூபாய் காசுகள் சிதறி கிடந்தது. அப்போது அறுவடை செய்த விவசாய தொழிலாளர்கள் சில்லறை காசுகளை எடுத்து வயல் உரிமையாளரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை வைத்து பார்த்தால் ஆசிரியர் வீட்டில் கொள்ளை நடந்த அன்றே கொள்ளையர்கள் கமலா வீட்டையும் உடைத்து நகைகள், பணத்தை அள்ளி சென்றது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களைப் பிடிக்க 3 தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது….

The post திருச்சி அருகே துணிகரம் பண்ணையார் வீட்டின் பூட்டை உடைத்து 120 பவுன், ரூ.12 லட்சம் கொள்ளை: 15கிலோ வெள்ளி பொருட்களும் அபேஸ் appeared first on Dinakaran.

Tags : Venture ,Trichy ,Venture Farm ,Dinakaran ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...