×

உக்ரைன் கிழக்கு பகுதியில் அதிகமாக இந்திய மாணவர்கள் தவிப்பு: சேலம் திரும்பிய மாணவி பேட்டி

சேலம்: சேலம் மாவட்டம், ஓமலூர் கதிர்செட்டிதெருவைச் சேர்ந்தவர் குமார். இவர், காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் அனிதா, உக்ரைன் நாட்டில் உள்ள தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஐந்தாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். இந்நிலையில், உக்ரைன்-ரஷ்யா போரால் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலையால், உக்ரைனில் தவித்து வரும் தமிழக மாணவர்களை மீட்க, தமிழக முதல்வர் ஸ்டாலின் குழு அமைத்து நடவடிக்கை எடுத்தார். அதன்படி, தனி விமானம் மூலம் மாணவர்கள் நாடு திரும்பி வருகின்றனர். அவ்வாறு தாயகம் திரும்பிய மாணவி அனிதா, சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். பின்னர், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு மாணவி அனிதா தனது வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அவரை பார்த்து உறவினர்கள் ஆனந்த கண்ணீர் வடித்தனர். உக்ரைனில் போர் நிலவரம் குறித்து மாணவி அனிதா கூறுகையில், ‘‘நாங்கள் ரஷ்யா -உக்ரைன் போரின்போது பதட்டமான சூழலில் இருந்தோம். உக்ரைன் கிழக்கு பகுதியில் அதிகமான இந்திய மாணவர்கள் உள்ளனர். அவர்களையும் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். அங்கு தற்போது பேருந்து கிடைப்பது கூட கஷ்டமாக உள்ளது. நாங்கள் போர் நடக்கும் பகுதியில் ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில், அண்டை நாட்டின் எல்லையில் இருந்தோம். அதனால், எங்களை எளிதாக மீட்டு வந்து விட்டனர். ஆனால், போர் நடக்கும் பகுதியில் உள்ளவர்கள் உணவு, தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மீண்டும் நாங்கள் எப்போது படிக்க முடியும் என்பது தெரியவில்லை. இங்கு படிப்பதற்கும் அங்கு படிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது’’ என்றார். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள தாவரக்கரை கிராமத்தை சேர்ந்த விஸ்வநாத் – வினோதா தம்பதியின் மகன் பானுபிரகாஷ்(18). இவர் உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் உள்ள மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் மீட்கப்பட்டு, சொந்த ஊர் திரும்பினார்….

The post உக்ரைன் கிழக்கு பகுதியில் அதிகமாக இந்திய மாணவர்கள் தவிப்பு: சேலம் திரும்பிய மாணவி பேட்டி appeared first on Dinakaran.

Tags : eastern part of Ukraine ,Salem ,Kumar ,Kathirsetthiru, ,Omalur, ,Salem district ,Kadaiyambatti ,
× RELATED செல்போனை தந்தை பறித்ததால் பிளஸ் 1 மாணவி தற்கொலை