×

தேன்கனிக்கோட்டை அருகே நர்சரி தோட்டத்தை நாசம் செய்த யானைகள்: விவசாயி கவலை

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே எஸ்.குருபட்டி கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு, 3 யானைகள் விவசாய தோட்டங்களில் புகுந்தது பயிர்களை நாசப்படுத்தின. தொடர்ந்து அருகில் இருந்து ஆனந்த்பாபு என்பவரது நர்சரி ரோஜா தோட்டத்தில் புகுந்த யானைகள், பதியம் போட்டிருந்த 35 ஆயிரம் ரோஜா செடிகளை காலால் மிதித்து நாசப்படுத்தின. நேற்று காலை தண்ணீர் பாய்ச்ச வந்த ஆனந்த்பாபு, நர்சரி தோட்டம் யானைகளால் சேதமடைந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், ‘கடந்த சில நாட்களாக யானைகள் விளைநிலங்கள், தோட்டங்களில் புகுவது வாடிக்கையாக உள்ளது. தற்போது நர்சரி தோட்டத்தை நாசப்படுத்தி உள்ளன. வனத்துறையினர் நேரில் பார்வையிட்டு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,’ என்றார். …

The post தேன்கனிக்கோட்டை அருகே நர்சரி தோட்டத்தை நாசம் செய்த யானைகள்: விவசாயி கவலை appeared first on Dinakaran.

Tags : Honeycomb ,DENKANIKOTA ,Krishnagiri District ,Thenkanikotta ,Gurupatti ,Dinakaran ,
× RELATED ஒசூர் அருகே உடல்நலக்குறைவால் 30 வயதான பெண் யானை உயிரிழப்பு