×

அமாவாசை, மகாசிவராத்திரியை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அமாவாசை, மகாசிவராத்திரியை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடு உயர்ந்து உள்ளது. தமிழகத்தில் பெங்களுர், ஒசூர், சேலம், கடப்பா, திண்டுக்கல், திருச்சி, மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து பூக்கள் கோயம்பேடு சந்தைக்கு தினசரி விற்பனைக்காக வருகிறது. கடந்த வாரம் மல்லி பூ ரூ.250, சாமந்தி பூ ரூ.80, பன்னீர்ரோஸ் ரூ.70, கனகாம்பரம் ரூ.500, ஜாதி ரூ.300, சம்பங்கி ரூ. 50, சிகப்பு ரோஸ் ரூ.30 என  விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று சிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு  பூக்களின் விலை பட்டியல் பின் வருமாறு, மல்லி பூ ஒரு கிலோ ரூ.250 இருந்து 500, சாமந்தி ரூ.80 இருந்து ரூ.140, பன்னீர்ரோஸ் ரூ.70 இருந்து ரூ.100, கனகாம்பரம் ரூ.600 இருந்து 700, ஜாதி ரூ.300 இருந்து 450, சம்பங்கி ரூ. 50 இருந்து 100, சிகப்பு ரோஸ் ரூ.30 இருந்து 50 என பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இது குறித்து பூ மார்க்கெட் பொருளாளர் பெருமாள் கூறுகையில், மகா சிவராத்திரி மற்றும் அமாவாசையை முன்னிட்டு மார்க்கெட்டில் மல்லி, சாமந்தி, பன்னீர் ரோஸ், கனகாம்பரம், சம்பங்கி ஆகிய பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை 2நாளைக்கு பிறகு வழக்கம் போல விலை குறையும் என கூறினார்….

The post அமாவாசை, மகாசிவராத்திரியை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடு உயர்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Coimbed Market ,Amavasa ,MahaSivaratri ,Tamil Nadu ,Bangalore ,Osur ,Mahazivaratri ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...