×

முதன்முறையாக நடப்பாண்டில் பத்திரப்பதிவுத்துறை வரலாற்றில் ரூ.12,096 கோடி வருவாய்: உயரதிகாரி தகவல்

சென்னை:. தமிழகத்தில் உள்ள 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 25 லட்சம் ஆவணங்கள் வரை பதிவு செய்யப்படுகிறது. ஆனாலும்  ஆண்டிற்கு  ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் கூட வருவாய் ஈட்ட முடியவில்லை. இதற்கு, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வழிகாட்டி மதிப்பை காட்டி மதிப்பை குறைத்து  பத்திரம் பதிவு செய்ய ஆட்சியாளர்கள் நிர்ப்பந்தம் செய்தனர். இதனால், அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது.  அதேபோன்று, கட்டிட களப்பணி நிலுவை, மதிப்பை குறைக்கக்கோரி நிலுவையில் உள்ள ஆவணங்கள் உட்பட பல்வேறு காரணங்களால் அரசுக்கு இழப்பு அதிகரித்தது.  இதனால் அரசின் வருவாய்  கடந்த 2020-21ம் ஆண்டில் ரூ.10,643 கோடி மட்டுமே வருவாய் இலக்கை எட்ட முடிந்தது. இந்த காலக்கட்டத்தில் வருவாய் இலக்கு ரூ.13 ஆயிரம் கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் பத்திரப்பதிவுத்துறையின் வருவாயை பெருக்க திட்டமிடப்பட்டது. அதன்படி,  பதிவு செய்த அன்றே பத்திரங்கள் திருப்பி தரப்படுகிறதா, நிலுவையில் உள்ள ஆவணங்களை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன, பத்திரப்பதிவின் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறதா என்பது குறித்து ஒவ்வொரு வாரமும் ஆய்வு செய்ய வேண்டும் என்று  மாவட்ட தணிக்கை பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டார்.தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் நிலுவையில் உள்ள ஆவணங்கள் குறித்து பதிவுத்துறை ஐஜி சிவன் அருள், மாவட்ட பதிவாளர்கள், டிஐஜிக்களிடம் கேட்டறிந்து வருகிறார். இதன் விளைவாக பதிவுத்துறை நடப்பாண்டில் கடந்த பிப்ரவரி மாதம் வரை ரூ.12096.36 கோடி வருவாய் எட்டியுள்ளது. இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத சாதனையை பதிவுத்துறை படைத்துள்ளது. இந்நிலையில் இன்னும் 30 நாட்கள் உள்ள நிலையில் ரூ.13 ஆயிரம் கோடி வரை வருவாய் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பதிவுத்துறை வரலாற்றில் இல்லாத புதிய உச்சத்தை தொடுவதாக இருக்கும் என்று பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்….

The post முதன்முறையாக நடப்பாண்டில் பத்திரப்பதிவுத்துறை வரலாற்றில் ரூ.12,096 கோடி வருவாய்: உயரதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு