×

மூளை குறைபாட்டால் 26 வயதிலேயே மைக்ரோசாப்ட் நிறுவன சிஇஓ.வின் மகன் மரணம்

புதுடெல்லி:  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாதெல்லாவின் 26 வயது மகன் உயிரிழந்தார். தெலங்கானாவின் ஐதராபாத் பகுதியில் பிறந்தவர் சத்ய நாதெல்லா. இவர் கடந்த 2014ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த நிறுவனத்தில் பல்வேறு முக்கிய மாற்றங்களை கொண்டு வந்தார். பின்னர், 2021ம் ஆண்டு நிறுவனத்தின் தலைவராகவும் ஆனார். சத்ய நாதெல்லாவின் மகன் சைன் நாதெல்லா.இவர் பிறக்கும்போது மூளையில் ஏற்படும் குறைபாடு காரணமாக கை, கால்களை செயலிழக்க செய்யும் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டார். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பெரும்பாலான உடல் உறுப்புக்கள் முறையாக செயல்படாது. இவர்கள் வாழ்நாள் முழுவதும் சக்கர நாற்காலியிலேயே அவதிப்படுவது வழக்கம். இந்த நோயால் பாதிக்கப்பட்ட சைன் நாதெல்லா சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு சமூக வலைதளங்களில் ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘மிகவும் துரதிருஷ்டவசமாக சத்ய நாதெல்லாவின் மகன் இறந்து விட்டார். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறோம்,’ என்று தெரிவித்தார்….

The post மூளை குறைபாட்டால் 26 வயதிலேயே மைக்ரோசாப்ட் நிறுவன சிஇஓ.வின் மகன் மரணம் appeared first on Dinakaran.

Tags : Microsoft ,CEO ,New Delhi ,Satya Nadella ,Telangana ,Hyderabad ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் முதலீடு: வாரன் பஃபெட் விருப்பம்