×

எச்-1பி விசா பெறுவதற்கு விண்ணப்பங்கள் குவிந்தன: இந்தாண்டுக்கான ஒதுக்கீடு காலி

வாஷிங்டன்: நடப்பு நிதியாண்டிற்கான எச்-1பி விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகபட்சமான 65,000ஐ எட்டியதாக அமெரிக்க குடிமக்கள் மற்றும் குடிவரவு சேவைகள் துறை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பணி புரிவதற்கு பல்வேறு வகை விசாக்கள் வழங்கப்பட்டு வரும் போதிலும், எச்-1பி தற்காலிக விசாவை பெறுவதற்கு அதிகளவில் போட்டி நிலவுகிறது. தற்காலிக விசாவான இதன் மூலம் நிறுவனங்கள், சிறப்புப் பணிகளுக்கு திறன் வாய்ந்த அமெரிக்கர்கள் கிடைக்காத நிலையில் வெளிநாட்டுப் பணியாளர்களைக் கொண்டு அந்தப் பணியிடங்கள் நிரப்ப முடியும். இந்தப் பணியாளர்கள் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இந்த விசா மூலம் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக 3 ஆண்டுகள் பணியாற்ற முடியும். தேவைப்படும் பட்சத்தில் இதனை நீட்டித்து கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு நிதியாண்டிலும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு 65,000 எச்-1பி விசாக்களும், பட்டமேற்படிப்பு, அதற்கு மேல் படித்தவர்களுக்காக கூடுதலாக 20,000 எச்-1பி விசாக்களும் வழங்கப்படுகின்றன. இது பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு பொருந்தாது. இந்நிலையில், அமெரிக்க குடிமக்கள் மற்றும் குடிவரவு சேவைகள் நேற்று வெளியிட்ட அறிக்கையில், `நடப்பு நிதியாண்டிற்கான பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான 65,000, பட்ட மேற்படிப்பு முடித்தவர்களுக்கான கூடுதல் 20,000 எச்-1பி விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதன் அதிகபட்ச அளவை எட்டியுள்ளது. எனவே, விண்ணப்பங்களை ஆன்லைனில் பெறுவதற்கான அறிவிப்புகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது எச்-1பி விசாவில் வேலை செய்பவர்கள் இதற்கு முன்பு ஏற்கனவே விண்ணப்பித்து இருப்பதால், அவர்களுக்கு நடப்பு நிதியாண்டில் விண்ணப்பம் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது,’ என்று கூறப்பட்டுள்ளது….

The post எச்-1பி விசா பெறுவதற்கு விண்ணப்பங்கள் குவிந்தன: இந்தாண்டுக்கான ஒதுக்கீடு காலி appeared first on Dinakaran.

Tags : India ,Washington ,US Citizens and Immigration Services ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் நடந்து வரும்...