- ஷாரு கான்
- மதுரை, சென்னை
- மும்பை
- ஜவான்
- ஷாரு கான்
- ஜாவன்
- சென்னை, மதுரை
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
மும்பை: ஆயிரம் பெண் நடன கலைஞர்களுடன் ஷாருக்கான் இணைந்து நடனமாடிய ஜவானின் முதல் பாடல் ‘ஜிந்தா பண்டா’ வீடியோ விரைவில் வெளியாகிறது. ஜவானின் முதல் பாடலான ‘ஜிந்தா பண்டா’, 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் நடன கலைஞர்களுடன் ஐந்து நாட்களுக்கும் மேல் படமாக்கப்பட்டது. இந்த பாடலுக்கு ஷோபி நடனம் அமைக்க, அனிருத் இசைக்கு ஷாருக்கான் மற்றும் ஆயிரக்கணக்கான பெண்கள் நடனமாடும் காட்சி சென்னையில் படமானது.
மேலும் முக்கிய காட்சிகள் ஐதராபாத், பெங்களூரு, மதுரை, மும்பை என பல இந்தியாவின் முக்கியமான நகரங்களிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு ஐந்து நாட்களுக்கு மேல் சென்னையில் மிக பிரமாண்டமான அரங்கத்தில் கொண்டாட்ட வடிவில் உருவான பாடல் என்கிறது படக்குழு. கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரபல இசைக் கலைஞரான ராஜா குமாரியும் இந்த படத்தில் பாடியிருக்கிறார். அட்லி இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘ஜவான்’ படத்தில் அவர் கதை, திரைக்கதையும் எழுதியுள்ளார். ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். தீபிகா படுகோன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் சானியா மல்ஹோத்ரா, பிரியா மணி, கிரிஜா ஓக், சஞ்சிதா பட்டாச்சாரியா, லெஹர் கான், ஆலியா குரேஷி, ரீதி டோக்ரா, சுனில் குரோவர் மற்றும் முகேஷ் சாப்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ‘ஜவான்’ திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, கவுரி கான் தயாரித்துள்ளார். கவுரவ் ஷர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றிருக்கிறார். இந்த படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
The post சென்னை, மதுரையில் உருவான ஷாருக்கான் பாடல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.