×

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவி உருக்கமான பேட்டி நாடு திரும்ப உதவிய அனைவருக்கும் நன்றி

சென்னை: நாடு திரும்ப உதவிய அனைவருக்கும் நன்றி என உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவி கண்ணீர்மல்க கூறினார். உக்ரைன் நாட்டிலிருந்து நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வந்த டெல்லி விமானத்தில் சென்னையை சேர்ந்த அஜய் கணேசன், வர்ஷா, ஸ்ரீஹரிணி, தேன்மொழி, மதுஸ்ரீ, கோவையை சேர்ந்த ஸ்ரீதேவி, கஸ்தூரி, மதுரையை சேர்ந்த விக்னேஷ், பிரியதர்ஷினி ஆகிய 9 மாணவர்கள் சென்னை விமானநிலையம் வந்து சேர்ந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 11 மணிக்குமேல் கோவையை சேர்ந்த ஹர்ஷவர்தன், அருப்புகோட்டை ஹேமந்த்குமார், கரூர் மாணவர்கள் 2 பேர், நீலகிரியை சேர்ந்த 2 மாணவர்கள் வந்தனர். இதைத் தொடர்ந்து, ஒரே நாளில் உக்ரைனில் மீட்கப்பட்ட 23 தமிழக மாணவர்கள் 5 சிறப்பு விமானங்கள் மூலம் சென்னைக்கு வந்தனர். உக்ரைனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்ரீதேவி என்ற மாணவி கூறுகையில், ‘‘உக்ரைனில் மருத்துவம் படித்து வருகிறேன். போர் நடக்கும் உக்ரைன் நாட்டில் இருந்து ஹங்கேரிக்கு வந்தோம். அங்குஎந்த சிரமமும் இல்லாமல் நாடு திரும்புவதற்கு உரிய உதவிகளை ஒன்றிய-தமிழக அரசு தரப்பில் செய்யப்பட்டு இருந்தது. நாங்கள் நாடு திரும்ப உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள மற்றவர்களையும் பாதுகாப்பாக மீட்க வேண்டும். உக்ரைன் நாட்டில் போர் பதற்றம் காரணமாக, என்னுடன் பயின்ற சக மாணவர்கள் ஆங்காங்கே பாதாள சுரங்க பாதையில் அடைபட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு போதுமான உணவும், கழிப்பிட வசதியும் இன்றி மிகவும் சிரமப்படுகின்றனர் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்….

The post உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவி உருக்கமான பேட்டி நாடு திரும்ப உதவிய அனைவருக்கும் நன்றி appeared first on Dinakaran.

Tags : Ukraine ,Chennai ,Kanyar Malka ,
× RELATED உக்ரைன் போருக்கு மத்தியில் அணு ஆயுத போர் பயிற்சி: ரஷ்யா பகிரங்க அறிவிப்பு