×

விருது நடிகை ரம்யா பாண்டியன்

‘டம்மி டப்பாசு’ என்ற படத்தில் அறிமுகமானவர், ரம்யா பாண்டியன். ஆனால், ‘ஜோக்கர்’ படத்தின் மூலம் பிரபலமானார். அதில் அவர், தன் வீட்டுக்கு ஒரு டாய்லெட் வேண்டும் என்பதற்காகப் போராடும் பெண்ணாக நடித்திருந்தார். இப்படத்தை ராஜூ முருகன் இயக்கினார். இப்படத்துக்கு சிறந்த படத்துக்கான தேசிய விருது கிடைத்தது. மேலும், இப்படத்தில் பாடிய சுந்தர அய்யருக்கு சிறந்த பாடகருக்கான தேசிய விருது கிடைத்தது. ரம்யா பாண்டியன் நடித்த முதல் மலையாளப் படம், ‘நண்பகல் நேரத்து மயக்கம்’. லிஜோ பெல்லிசேரி இயக்கினார். மம்மூட்டி ஹீரோவாக நடித்தார். இப்படத்தில், திடீரென்று ஓடிவிட்ட தன் கணவனை நினைத்து ஏங்கும் பெண்ணாக ரம்யா பாண்டியன் நடித்தார்.

இப்படத்துக்கு சிறந்த படத்துக்கான கேரள மாநில அரசு விருது கிடைத்துள்ளது. மம்மூட்டிக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. ரம்யா பாண்டியன் குறைந்த படங்களில் நடித்திருந்தாலும், அவர் நடித்த சில படங்கள் விருதுகளை வாரிக்குவிப்பது குறித்து அதிக மகிழ்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் நடித்த ‘ஜோக்கர்’, ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ ஆகிய படங்கள் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படங்கள். இரண்டிலும் நான் சாதுவான கிராமத்துப் பெண்ணாக நடித்திருந்தேன். இரு படங்களும் விருது பெற்றுள்ளதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது. நானும் விரைவில் விருது வாங்குவேன் என்று நம்புகிறேன். தற்போது ‘இடும்பன்காரி’ என்ற படத்தில் நடித்து வருகிறேன்’ என்றார்.

The post விருது நடிகை ரம்யா பாண்டியன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ramya Pandian ,Ramya Pandyan ,Raju Murugan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தீபாவளி ஸ்பெஷல் ஜப்பான், ஜிகர்தண்டா...