×

ஆகஸ்ட் 25ம் தேதி வெளியாகிறது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘அடியே’

திட்டம் இரண்டு பட இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘அடியே’. ஜி.வி.பிரகாஷ், கௌரி கிஷன், ஆர்.ஜே.விஜய் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். வித்தியாசமான கதை அம்சத்தில் உருவாகியுள்ள இப்படத்தை பெரிய பொருட்செலவில் மாலி மற்றும் மான்வி நிறுவனம் தயாரித்துள்ளனர்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் ஏற்கனவே இந்த படத்திலிருந்து வெளிவந்த இரண்டு பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தை வருகின்ற ஆகஸ்ட் 25ம் தேதி அன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.

The post ஆகஸ்ட் 25ம் தேதி வெளியாகிறது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘அடியே’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : G. CV ,Prakash ,Vignesh Karthic ,CV ,Gauri Kishan ,R. JJ vijay ,Mali ,Manvi ,Vyatcela ,Adeye ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தினமும் காலையில் எழுந்தவுடன் 100...