×

தேயிலைத்தோட்டம் வனப்பகுதியாக மாறுவதை தடுக்க நடவடிக்கை தேவை

பந்தலூர் : தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக்கழகமானது (டேன்டீ) கோவை வால்பாறை மற்றும் குன்னூர்,கோத்தகிரி  கூடலூர்,பந்தலூர் பகுதிகளில் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களின் மறுவாழ்வுக்காக திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதியில் ஆரம்பிக்கப்பட்டது. பல ஆயிரம் ஏக்கர்களில் தேயிலை பயிரிடப்பட்டு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர  தொழிலாளர்கள் பணிப்புரிந்து வருகின்றனர். சேரம்பாடி டேன்டீ சரகம் 1 முதல் 4 வரையுள்ள சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் உள்ள தேயிலை தோட்டத்தில் 700 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.  கடந்த அதிமுக ஆட்சியில் சுமார் 135 ஏக்கர் பரப்பில் உள்ள தேயிலை தோட்டத்தை வனமாக அறிவித்து பராமரிப்பு பணிகள் எதுவும் செய்யாமல் காடுகளாக  டேன்டீ நிறுவனம்  மாற்றியது.இதனால் தொழிலாளர்கள் தொலைதூரம் உள்ள டேன்டீ பகுதியான சின்கோனா, நாயக்கன்சோலை உள்ளிட்ட பகுதிகளுக்கு பணிபுரிவதற்கு அலைக்கழிக்கப்படுகின்றனர். அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடியிருந்து வரும்  குடியிருப்புகளையும் டேன்டீ நிர்வாகம் அப்புறப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எந்த நோக்கத்திற்காகக அரசால் ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்கு எதிராக டேன்டீ நிர்வாகம் செயல்படுவதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்து டேன்டீ நிறுவனத்தை பாதுகாத்து தொழிலாளர்களுக்கு உதவிடவேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post தேயிலைத்தோட்டம் வனப்பகுதியாக மாறுவதை தடுக்க நடவடிக்கை தேவை appeared first on Dinakaran.

Tags : Bandalur ,Tamil Nadu Government ,Plantation ,Govai Walpara ,Kunnur ,Gothagiri Kuddalur ,Sri Lanka ,
× RELATED பந்தலூர் பஜாரில் கழிவுநீர் கால்வாய்...