×

சின்னாளபட்டி பகுதியில் மிளகாயை தாக்கும் இலைச்சுருட்டு நோய்-தரமான மருந்து பரிந்துரைக்க கோரிக்கை

சின்னாளபட்டி : சின்னாளபட்டி அருகே கூலம்பட்டி, பாளையங்கோட்டை, சித்தையன்கோட்டை, வீரசிக்கம்பட்டி, போடிகாமன்வாடி, அழகர்நாயக்கன்பட்டி, ஆத்தூர், பாறைப்பட்டி, ராமநாதபுரம், வேலகவுன்டன்பட்டி, வீரக்கல், அம்பாத்துரை உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் பச்சை மிளகாயை விவசாயிகள் நடவு செய்து இருந்தனர். அவை தற்போது நன்கு விளைச்சல் அடைந்து காய்த்து குலுங்குவதால் தினசரி அவற்றை பறித்து ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை காய்கறி மார்கெட்டுகளுக்கு வேன்கள், லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர். மார்க்கெட்டில் 1 கிலோ பச்சைமிளகாய் ரூ.60 முதல் ரூ.80 வரை விற்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது பச்சை மிளகாயில் இலைச்சுருட்டு நோய் தாக்கி வருகிறது. மருந்து அடித்தும் பூச்சி தாக்குதல் குறையாததால் விளைச்சல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.இதுகுறித்து விவசாயி துரைப்பாண்டி கூறுகையில், ‘பச்சை மிளகாய் நாற்று ஒன்று 1 ரூபாய்க்கு வாங்கி வந்து நடவு செய்திருந்தோம். மிளகாயில் இலைசுருட்டு நோய் தாக்கிய போது செம்பட்டி, ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து மருந்துகள் வாங்கி வந்து தெளித்து பார்த்தோம். ஆனால் பயனில்லை. தற்போது ஆண்டிப்பட்டி பகுதியில் இருந்து மருந்தை வாங்கி தெளித்து வருகிறோம். எனவே வேளாண்துறை அதிகாரிகள் தரமான நோய் ஒழிப்பு மருந்துகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்….

The post சின்னாளபட்டி பகுதியில் மிளகாயை தாக்கும் இலைச்சுருட்டு நோய்-தரமான மருந்து பரிந்துரைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chinnalapatti ,Koolampatti ,Palayamkottai ,Sidthiankottai ,Veerashikambatti ,Podikamanwadi ,Alagaranayakanpatti ,Athur ,Bhikhapatti ,Ramanathapuram ,Velakauntanpatti ,Veerakkal ,
× RELATED சின்னாளபட்டி சாலையில் தேங்கும்...