×

கமல்ஹாசனுடன் நடிக்காதது ஏன்? நதியா பதில்

சென்னை: கமல்ஹாசனுடன் நடிக்காதது பற்றி பேசியிருக்கிறார் நதியா. ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு நடித்துள்ள படம் எல்ஜிஎம். கிரிக்கெட் வீரர் தோனி தயாரித்துள்ளார். இந்த படம் தொடர்பான நிகழ்வில் ரசிகர்களுடன் நதியா கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியது: எனது இளமையின் ரகசியம் என்ன என்று கேட்கிறார்கள். அனைத்துக்கும் உங்கள் அன்பு தான் காரணம். என்ன வேண்டுமானாலும் சாப்பிடுங்கள், ஆனால் முதல் மாடியாக இருந்தாலும் லிப்ட் பயன்படுத்தாமல் நடந்து செல்லுங்கள். இதுதான் என்னுடைய பழக்கமாக வைத்திருக்கிறேன்.

இத்தனை வருடங்களாக கமல்ஹாசனுடன் நடிக்கவில்லை இனிமேல் நடிப்பீர்களா என்று ரசிகர் ஒருவர் கேட்டபோது ‘அவரும் இப்போது நடித்துக் கொண்டுதான் இருக்கிறார், நானும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன், இருவரும் சேர்ந்து நடிக்க வாய்ப்பு இருக்கிறது’ என்று தெரிவித்தார். ஹீரோயின் கேரக்டர்களில் நதியா நடித்து வந்த சமயத்தில் ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, மோகன் உள்பட பலருடன் நடித்திருக்கிறார். ஒரு சில படங்களில் கமல்ஹாசனுடன் நடிக்க வந்த வாய்ப்பை கால்ஷீட் பிரச்னையால் அவர் ஏற்கவில்லை. இதையடுத்து கமலுடன் அவர் நடிக்காமலே சினிமாவிலிருந்து ஒதுங்கிப்போனார். இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளதால் கமலுடன் சேர்ந்து அவர் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கமல்ஹாசனுடன் நடிக்காதது ஏன்? நதியா பதில் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kamal Haasan ,Nadia ,Chennai ,LGM ,Harish Kalyan ,Ivana ,Yogi Babu ,Dhoni ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சொல்லிட்டாங்க…