×

கமல் படத்துக்கு ராஜமவுலி பாராட்டு

ஐதராபாத்: கமல்ஹாசன் நடிக்கும் பான் இந்தியா படத்துக்கு ராஜமவுலி பாராட்டு தெரிவித்துள்ளார். அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் நடிக்கும் படம் ‘கல்கி’. இந்த படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. இதைப் பார்த்த ராஜமவுலி டிவிட்டரில், ‘இயக்குனர் நாக் அஸ்வின் மற்றும் வைஜெயந்தி மூவிஸ் பிரமாண்டமான ஒரு படத்தை கொடுத்துள்ளனர். கடந்துபோன காலத்தை கண்முன் கொண்டு வருவது லேசான காரியம் இல்லை. அதனை நீங்கள் சாத்தியமாக்கி இருக்கிறீர்கள். டார்லிங் (பிரபாஸ்) ஸ்டைலாக இருக்கிறார். படம் எப்போது வெளியாகும் என்ற ஆர்வத்தை முன்னோட்டம் தூண்டியிருக்கிறது. படத்தில் நடிக்கும் அமிதாப் ஜி, கமல்ஹாசன் சார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்’ என்றார். இந்த படத்தில் கமல்ஹாசன் நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு இனிமேல்தான் தொடங்க உள்ளது. படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரலில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

The post கமல் படத்துக்கு ராஜமவுலி பாராட்டு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Rajamouli ,Kamal ,Hyderabad ,Kamal Haasan ,Pan India ,Amitabh Bachchan ,Prabhas ,Deepika Padukone ,US ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மெய்யழகனுக்கு 2 பாடல்கள் பாடிய கமல்