×

மம்முட்டி படத்தின் 5ம் பாகம், தி பிரெய்ன்

திருவனந்தபுரம்: மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் 1988ல் வெளியான படம், ‘ஒரு சிபிஐ டைரி குறிப்பு’. ஒரு கொலையை பல்வேறு கோணத்தில் துப்பறியும் கதை கொண்ட இப்படம் தமிழகத்திலும் 100 நாட்களை கடந்து ஓடியது. சிபிஐ அதிகாரி மம்முட்டியின் உதவியாளர்களாக முகேஷ், ஜெகதி ஸ்ரீகுமார் நடித்திருந்தனர். குறிப்பாக, மாறுவேடத்தில் ஜெகதி ஸ்ரீகுமார் துப்பறியும் காட்சிகள் நகைச்சுவையும், சுவாரஸ்யமும் கொண்டவை. இப்படத்தின் 2ம் பாகமான ‘ஜாக்ரதா’ 1989லும், 3ம் பாகமான ‘சேதுராம அய்யர் சிபிஐ’ 2004லும், 4ம் பாகமான ‘நேரறியான் சிபிஐ’ 2005லும் வெளியானது. கடந்த 34 வருடங்களில் வெளியான 4 பாகங்களும் வெற்றிபெற்றன. 4 பாகங்களிலும் சேதுராம அய்யர் என்ற சிபிஐ அதிகாரி வேடத்தில் மம்முட்டி நடித்திருந்தார். கே.மது இயக்க, எஸ்.என்.சுவாமி கதை எழுதியிருந்தார். தற்போது 17 வருட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் 5ம் பாகம் உருவாகியுள்ளது. இதில் மம்முட்டி, முகேஷ், ஜெகதி ஸ்ரீகுமார், சுவாசிகா, கனிகா நடித்துள்ளனர். 4 பாகங்களை இயக்கிய கே.மது 5ம் பாகத்தையும் இயக்கியுள்ளார். இவர், தமிழில் மம்முட்டி, அமலா நடிப்பில் 1990ல் வெளியான ‘மௌனம் சம்மதம்’ என்ற படத்தை இயக்கியவர். 4 பாகங்களுக்கு கதை எழுதிய எஸ்.என்.சுவாமி 5ம் பாகத்துக்கும் எழுதியுள்ளார். இப்படத்துக்கு ‘தி பிரெய்ன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது….

The post மம்முட்டி படத்தின் 5ம் பாகம், தி பிரெய்ன் appeared first on Dinakaran.

Tags : Mammootty ,
× RELATED மம்மூட்டிக்கு வித்யா பாராட்டு