×

தேசிய அளவிலான பிரச்சனைகளுக்கு பல நேரங்களில் தமிழகம் தீர்வைத் தந்துள்ளது: உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவில் தேஜஸ்வி யாதவ் பேச்சு

சென்னை: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய சுயசரிதை நூலான உங்களில் ஒருவன் புத்தகத்தை காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரை நிகழ்த்திய பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ்; மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழகம் திகழ்கிறது. தேசிய அளவிலான பிரச்சனைகளுக்கு பல நேரங்களில் தமிழகம் தீர்வைத் தந்துள்ளது. சமூக நீதிக்கு முன்னுரிமை அளித்து இந்த ஆட்சி செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டின் சமூக நீதி கொள்கையால் கவரப்பட்டு பீகாரில் அதனை நடைமுறைப்படுத்தியவர் எனது தந்தை லாலு பிரசாத் யாதவ். சமூக நீதி குறித்த எங்களின் பார்வைக்கு தமிழ்நாடே காரணம். மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள நூலை படிப்பவர்கள் அவரது அரசியலை பற்றி புரிந்துக்கொள்ள முடியும். மக்களின் நாடியை நன்கு அறிந்தவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். சரித்திரம் படைப்பவர்கள் வரிசையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். தமிழ்நாட்டை பார்க்கும் போது சமூக நீதி, மக்கள் ஒற்றுமை குறித்து ஆச்சரியமாக இருக்கும். அரசியல் சாசன உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக தமிழகத்திடம் இருந்து கற்று கொள்கிறோம். சமத்துவம் சமூக நீதிக்கான தமிழ்நாட்டின் போராட்டத்தை மதிக்கிறோம்; தமிழ்நாட்டு தலைவர்களான பெரியார் அண்ணா கலைஞர் போன்றோரின் கொள்கைகள் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின இவ்வாறு கூறினார். …

The post தேசிய அளவிலான பிரச்சனைகளுக்கு பல நேரங்களில் தமிழகம் தீர்வைத் தந்துள்ளது: உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவில் தேஜஸ்வி யாதவ் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Tejashwi Yadav ,Ujhilil Van ,CHENNAI ,Congress ,Rahul Gandhi ,Chief Minister ,M.K. Stalin ,Tejaswi Yadav ,Ujhilil ,Dinakaran ,
× RELATED ஒரே விமானத்தில் டெல்லி செல்லும் நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ்..!!