×

இயக்குனராகும் ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ரா

பாலிவுட் ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ரா, மும்பையைச் சேர்ந்தவர். இந்தி, தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் உருவான படங்களில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார். தமிழில் திரைக்கு வந்த ‘இந்தியன்’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’, ‘புலி’ ஆகிய படங்களில் பணியாற்றியுள்ள அவர், பாலிவுட் படத்தின் மூலம் விரைவில் இயக்குனராக அறிமுகமாகிறார். பழம்பெரும் இந்தி நடிகை மீனா குமாரியின் வாழ்க்கைச் சம்பவங்களை மையமாக வைத்து அவரது முதல் படம் உருவாகிறது.

இதற்கு முன்பு பாலிவுட்டின் கனவுக்கன்னியாக இருந்த மீனா குமாரி, முதலில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். 90 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர், தனது 38வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். தற்போது படமாக்கப்படும் மீனா குமாரியின் வாழ்க்கை கதையில் கிரித்தி சனோன் நடிப்பார் என்று தெரிகிறது. இப்படத்தை டிசீரிஸ் சார்பில் பூஷன் குமார் தயாரிக்கிறார்.

The post இயக்குனராகும் ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ரா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Manish Malhotra ,Bollywood ,Mumbai ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் (81) மும்பை மருத்துவமனையில் அனுமதி